நீ கண்சிமிட்டினால்: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated On :30 ஏப்ரல் 2018, 10:53 am

கண்மூடிப் படுத்திருந்தால் சிலந்தி கூடக் கால்களினை இணைத்துவலை பின்னப் பார்க்கும்மண்மீதில் ஊர்ந்துசெல்லும் எறும்பு கூட மண்டைமீதில் ஏறிநின்றே எள்ளல் செய்யும்வண்ணமயக் கனவுகளில் மூழ்கி ருந்தால் வந்துநாயும் கால்தூக்கி நீர்க ழிக்கும்கண்சிமிட்டி நீயெழுந்தால் மலையும் கூடக் கடுகாகிப் பொடியாகும் உன்றன் கையால் !நடக்கின்ற கயமைகளைப் பார்த்துக் கொண்டே நடமாடிக் கொண்டிருந்தால் குருடன் என்பர்முடமாகிப் போனவன்போல் அமைதி காத்தால் முகமெதிரே ஏளனமாய் ஊமை யென்பர்படமெடுத்தே ஆடுகின்ற பாம்பைக் கண்டால் பக்கத்தில் நெருங்குதற்கும் அஞ்சல் போன்றேஅடலேறாய்க் கண்சிமிட்டி நீயெ ழுந்தால் அடுத்நொடிக் கயவர்கள் ஓடிப் போவர் !பெரும்ஆற்றல் உனக்குள்ளே அடங்கி யுள்ள பெருஞ்செய்தி அறியாமல் இருக்கின் றாய்நீஇருதோளின் வலிமையினைத் தெரிந்தி டாமல் இருபுறமும் தொங்கவிட்டுத் திரிகின் றாய்நீகருவிழியைச் சிமிட்டிநீயும் எழுந்து விட்டால் கடல்பொங்கி எழுவதுபோல் எழும்உன் ஆற்றல்அருஞ்செயல்கள் செய்திடுவாய் ! குமுகம் தன்னில் அடையாளம் பதித்திடுவாய் நிலைத்து நிற்பாய்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...