தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தனிமையோடு பேசுங்கள்: கவிஞர் நம்பிக்கை நாகராஜன்

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 12:07 pm

கவிதைமணி

“தனித்திருந்து”புலம்பிடுவோர் தனியாய் தானே  தன்மனதை உணராது தவிப்பார் என்றும்பிணியென்று உடலினிலே ஏதும் இன்றி  பிதற்றிடுவார் எப்போதும் “தாழ்வாய் எண்ணி”கனியென்றும் தெரியாது கசப்பும் தோன்றா  காண்போரை யாரென்றே கருதாப் பார்வைபனியென்றும் பகலென்றும் புரியா தாக  பகிர்ந்திடவே துணையில்லாது “பேசும் பாவம்”அறிவென்றோர் “ஞானத்தால்” நிறைந்தோர் உண்டு  அவர்பேசும் பேச்செல்லாம் அகத்தோ டன்றோநெறிகாக்க வேண்டுமென்று நினைப்போர் எல்லாம்  நிறைபொழுது “மொழிபேசா திருப்போர்”தானேஅறிந்துணரும் ஆய்வெல்லாம் ; ஒன்றாய் மக்கள்  அகமகிழ வைப்பதற்கே மௌனம் கொள்வார்வறியவராய் தோற்றத்தில் வாழ்ந்து ; பேச  வாய்திறக்கா திருப்பார்கள் “மனமே பேசும்”தேவையென்றே வாய்திறக்கும் “நிலையே இன்றி”  தேவையில்லை என்றுரைக்க மனதால் பேசுமேவிநிற்கும் மிகவுயர்ந்த நேசம் பேச  முந்திவந்து “தனிமையது நம்முள்” பேசும்ஆவியென்றால் ஆசைகொண்டு அலையுந் தானே  ஆசைகளை அடக்குதற்கே அளவாய்ப் பேசுதாவுகின்ற மனம்அடங்க ; நம்முள் வந்து  “தனிமையது பேசிடுமே”மனதில் நின்று

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.