ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தனிமையோடு பேசுங்கள்: கவிஞர் மா.உலகநாதன்

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 10:19 am

கவிதைமணி

தனிமையோடு பேசத் தான் விழைந்தேன்;
ஆனால்,அது
பேச மறுத்துவிட்டது;
என்னென்று கேட்டேன்?
நட்பு, சுற்றம் என 
நாளும் உன்னைப் 
பலரும் சூழ்ந்திருக்க,
ஒத்தும் உதவியும்
பலர் போற்ற
வாழவே, உனைப் படைத்தேன்!
அவர்தம் மகிழ்ச்சியிலே
அகமகிழ்தல் யாருக்கும் 
கிட்டுவதுண்டோ,சொல்?
ஆனால், கடுகுள்ளம் கொண்டு
நத்தைபோல் உன்னை நீ
சுருக்கிக் கொண்டால் 
நானென்ன செய்வது?
நடந்து பார்,நாடெல்லாம் உன் சொந்தம்;
கொடுத்துப் பார்,
குவலயமே குதூகலிக்கும்;
இப் பிறவி வாய்த்த
துனக்கு,இனி  
இன்பமே எந்நாளும்
துன்பமில்லை;தனிமையில்லை!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.