கல்லெடுத்து நா(ர்)உறிப்பார்;
காற்றினையும் நஞ்சாக்கிப்
பொல்லாத செயல்விளைப்பார்;
புண்ணில்வேல் பாய்ச்சிடுவார்;
எல்லோர்க்கும் உள்ளவற்றை
எனக்கென்று பறித்திடுவார்;
வல்லமையால் தீங்கிழைக்க
வாழ்வுபோர்க் களமாகும்!
பொதுவான விடியலினைப்
பதுக்கிடுவார் தனதென்று;
மதுவினிலே குடியிருப்பார்;
மாண்புகளைக் கற்பழிப்பார்;
பதுமையெனப் பேசிடாத
பாமரரின் உழைப்புறிவார்;
சதுரங்கக் காய்களாக
சாகடிப்பார் நல்வினைகள்!
இயல்பான இயற்கைவளம்
இயன்றவரை திருடிடுவார்;
செயற்கைகளால் மண்ணுயிரைச்
சிதைத்திடுவார்; நலங்கெடுப்பார்;
வயல்பயிராய்த் தீவினைகள்
விளையவைத்து உயிரறுப்பார்;
பழியாகி வாழ்க்கையெனும்
போர்க்களமாய் மாறிற்றே!
கல்லாரும் இல்லாரும்
செல்வந்தர் அரசியலார்
பொல்லாரும் உள்ளதனால்
எல்லையில்லா வேறுபாட்டில்
நல்லறத்து வாழ்க்கையெனும்
நிலமின்று போர்க்களமாய்
அல்லலுறும் நிலையதனை
அமுதமென மாற்றுவமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

