/
அடுத்தவர்க்குத் துன்பத்தைத் தாராச் சொல்லாய் அனைவர்தம் செவிகளினை ஈர்க்கும் சொல்லாய்கடுகளவும் சினந்தன்னைத் தூண்டாச் சொல்லாய் கனியாக இனிக்கின்ற கனிவுச் சொல்லாய்நடுவுநிலை தவறாத நேர்மைச் சொல்லாய் நன்மைகளை விளைக்கின்ற நடவுச் சொல்லாய்விடுக்கின்ற சொற்கள்தாம் வெல்லும் சொற்கள் விளைவுகளைப் பயனாக்கும் அமுதச் சொற்கள் !பகையாக வெறுப்புதனை உமிழு கின்ற பாக்கித்தான் செயல்பாட்டில் மாற்றம் செய்துநகைசிந்தி அழைக்கின்ற நட்பாய் மாற்றும் நயத்தக்க சொற்கள்தாம் வெல்லும் சொற்கள் !தொகைதொகையாய்த் தமிழரினைக் கொன்று போட்டும் தொலையாத கொலைவெறியில் உள்ள இலங்கைதகைமையுடன் தமரென்றே சொல்ல வைக்கும் தணிவான சொற்கள்தாம் செல்லும் சொற்கள் !பக்கத்து வீட்டாரைப் பழக வைக்கும் பண்பான சொற்கள்தாம் வெல்லும் சொற்கள்நக்கலாகப் பேசுவோரை நயக்கு மாறு நவிலவைக்கும் சொற்கள்தாம் வெல்லும் சொற்கள் !துக்கத்தை மாற்றுகின்ற மருந்தாய் ஆகித் துணையாகும் சொற்கள்தாம் வெல்லும் சொற்கள்எக்கருத்தே ஆனாலும் ஏற்கும் வண்ணம் எடுத்துரைக்கும் சொற்கள்தாம் வெல்லும் சொற்கள் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்தது பச்சை துரோகம்! - மு. தமிமுன் அன்சாரி

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு

ஈரான் - அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்! - ஏ.எம். விக்கிரமராஜா

இளைஞா் விஷமருந்தி தற்கொலை
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

