ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வெல்லும் சொல்: கவிஞர் டாக்டர். இராஜலட்சுமி இராகுல்

Updated On :11 ஜூன் 2018, 10:36 am
உள்ளத்தில் விடம்கொண்டு உதட்டினில் மதுக்கொண்டு கள்ளத்தனம் கலந்துமொழிந்திடும் மனிதருள்;வெள்ளை மனத்தோடு எள்ளளவும் வன்மமின்றி பிள்ளை நீ சொல்லும் சொல்பேரின்பம் நல்கும் சொல்...இதயத்தில் கனிவன்பும் இதழ்களில் பணிவன்பும் எவர் மனமும் நோகாத இனிமையும் மென்மையும்.. அமுதமே வார்த்தைகளாய் அழகாய் நீ விளம்பும் சொல் அனைவரின் மனங்களையும் அக்கணமே வெல்லும் சொல் பிள்ளை உன் சொல்லாலே உள்ளமும் குளிருதே கல்லதும் கரையுதே கடவுளும் மகிழுதே எல்லையில்லா இன்பம் என்னுள்ளே நிரம்புதே கொள்ளை கொண்டென்மனம் உன் வசம் திரும்புதே குழலோசை சுவைகுன்றும்குயிலோசை செவிவெறுக்கும்  உன் குரலோசை அதன்முன்னால் கிளி தோற்றுத் தலை குனியும்அழுகையும் சிரிப்பாகும்பிழைகளும் கவியாகும் குழவி உன்மொழி கேட்டால் -மனக் குறைகளும் மறைந்தோடும்!!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.