கால் பதிக்கும் இடமெல்லாம்
கோலோச்சும் தடமாக மாற்றும்
“ உழைப்பா?”
உலக உயிரினங்களின்
உள்ளங்களை உள்ளிழுக்கும்
சொல் ஒன்று! “ உண்மையா? ”
வாழ்க்கை வாகனத்தை
மென்மையாய் நகர்த்தும்
எரிபொருள் ஒழுக்கம் – அதுவா ?
சுற்றி இருக்கும் மனங்களை
சுட்டி இழுக்கும்
வெற்றிச்சொல்
“தானமா? நிதானமா ?”
பஞ்சிலிருந்து இல்லை
நஞ்சிலிருந்தும்
நூல் உருவாக்கும்
“நெஞ்சுரமா ?”
ஜெகத்தையே ஜெயிக்கும்
தனிச்சொல் “திறமையா”?
செல்வம் நோக்கும்
மாறுகண் வேண்டாம் –
“கடமையும் கல்வியும்”
ஒரே பார்வையாய் வெல்லுமோ ?
வங்கிகளில் வேண்டாம் -
உறவுகளில், உணர்வுகளில்
ஒரு தன்னலமற்ற முதலீடு !
இந்த பொதுநலச்சொல்லா ?
இப்படி- இப்படிதான்
சிந்தனையை அலையவிட்டிருந்தேன்--
வெல்லாத சொல்
இல்லாத மொழி,
தமிழ் எனப்புரிந்தது !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்

பதற்றமான வாக்குச்சாவடிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும்! தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அறிவுரை

அரசுப் பள்ளிகளில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பம்

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

