ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வெல்லும் சொல்: ஆ. செந்தில் குமார்

Updated On :11 ஜூன் 2018, 9:52 am
தேடிச் சேர்த்த பணமெல்லாம்.. இறுதியில் நம்முடன் வந்திடுதா…?ஆடி அடங்கும் வாழ்க்கையிலே.. ஆணவம் கொள்வது சரிதானா…?​பட்டம் பதவி புகழெல்லாம்.. பாரினில் என்றும் நிலைத்திடுதா…?சட்டங்கள் எல்லாம் இங்கிருந்தும்.. குற்றங்கள் ஏதேனும் குறைந்திடுதா…? கூடி ஒன்றாய் வாழ்ந்திடுவோம்.. கூட்டுணர்வை வளர்த்திடுவோம்…!ஓடிச் சென்று உதவிடுவோம்.. ஒற்றுமை உணர்வால் ஓங்கிடுவோம்…!இன்முகத்தோடு இருந்திடுவோம்.. இனிக்கும் சொல்லே பேசிடுவோம்…!இதயத்தில் சுரக்கும் அன்பினையே.. எங்கும் பரவச் செய்திடுவோம்…!ஆட்டிப்படைக்கும் அதிகாரம்.. அடங்கிப்போகும் ஒரு காலம்…!அன்பெனும் சொல்லே அவணியிலே.. நிலைத்திருக்கும் பல காலம்…!அன்பெனும் அணையா விளக்கினையே.. அகிலத்தில் எங்கும் ஏற்றிடுவோம்…!அன்பெனும் மந்திரச் சொல்லொன்றே.. அகிலத்தை வெல்லுஞ்சொல் கேளீர்…!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.