ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வெல்லும் சொல்: கவிஞர் "இளவல்" ஹரிஹரன்

Updated On :11 ஜூன் 2018, 10:15 am
வெல்லுகின்ற சொல்லொன்று வசமாக வேண்டும்        வேட்கையுடன் அதன்பின்னே நாம்செல்ல  வேண்டும்சொல்லுகின்ற சொல்லதனை முன்னிறுத்த வேண்டும்        சொல்லுக்குப் பிறிதொருசொல் இல்லாமல் வேண்டும்பல்லுயிரும் விரும்புகின்ற சொல்லாக வேண்டும்        படைப்போனை ஈர்க்கின்ற மந்திரச்சொல் வேண்டும்தொல்லையெலாம் போக்குகின்ற நற்சொல்லாய் வேண்டும்        தொடக்கமென வருகின்ற பொருட்சொல்லாய் வேண்டும்.வித்தையெலாம் அறியவைக்கும் வியன்சொல்லாய் வேண்டும        வேதங்கள் மொழிகின்ற ஒருசொல்லாய் வேண்டும்புத்துலகம் காட்டுகின்ற புதுச்சொல்லாய் வேண்டும்         புத்தகங்கள் அறியாத பெருஞ்சொல்லாய் வேண்டும்நித்தமுமே நிம்மதியைத் தருஞ்சொல்லாய் வேண்டும்         நிர்மலமாய் மனவமைதி பெறுஞ்சொல்லாய் வேண்டும்எத்திசையும்  புகழ்மணக்கும் இன்சொல்லாய் வேண்டும்         இயன்றவரை நிறமறியாத் தனிச்சொல்லாய் வேண்டும்.நாள்தோறும் அச்சொல்லை நாம்சொல்ல வேண்டும்        நலமாக்கும் அருட்சொல்லே நாப்பேச வேண்டும்ஆள்சொல்லாய் அகச்சொல்லாய் நமையாள வேண்டும்        அன்பென்னும் அருளன்னை வாய்சொல்லாய் வேண்டும்கோள்பேசும் கொடுஞ்சொல்லில் லாதிருக்க வேண்டும்        கோபச்சொல் நீக்கியதோர் காதற்சொல் வேண்டும்மீள்விரும்பும் மிகுசொல்லாய் வாழ்க்கையிலே வேண்டும்        வெற்றியினை வழங்குவதே வெல்லுஞ்சொல் லன்றோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.