/
உள்ளத்தின் சிந்தனைகள் மலரே என்றால் உதவிகளாய் இதழ்விரிக்கும் மணமே தந்துபள்ளத்தில் வீழுகின்ற நீரென் றானால் பயன்தருமே வளர்பயிராய் அன்பே என்றும்தள்ளாது, நில்லாது எவர்க்கும் எங்கும் தன்னார்வத் தொண்டென்றால் உலகம் போற்றும்கொள்ளாத துன்பங்கள் கொடுமை நீங்க குளிர்கின்ற நிலைதந்தால் “வெல்லும் சொல்லே”நிறைவான நேசத்தில் வலிமை கூடும் நில்லாது பகையெல்லாம் எங்கோ ஓடும்குறைவில்லா உயர்வாழ்வு எல்லாம் வந்து குணமெல்லாம் அறமென்றே நிறையும் நீதிதிரைநீங்க ஒளிர்கின்ற கலைகள் போலே திறமெல்லாம் இசைந்திருந்து கீதம் பாடும்முறைகண்டே முனைவோர்க்கு முடியும் எல்லாம் முன்வந்து மறைபோற்ற “வெல்லும் சொல்லே”எப்போதும் நல்வழியே மனதில் தோன்ற இகழ்வெல்லாம் புகழாகி ஏற்றம் ஆகும்இப்போதே செய்திடுவேன் என்றோர் வேகம் இருக்கின்ற உயர்நிலையை வீழ்த்தும் கீழேசெப்புகின்ற மனச்சான்று உண்மை ஆகும் செய்யாது விட்டுவிட்டால் வீணாய்ப் போகும்தப்பாது இனியென்றும் வாய்மை கொள்ள தவறாது அறம்சூழ்ந்து “வெல்லும் சொல்லே”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

