ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மிச்சத்தைமீட்போம்: ஆர்.அருண்குமார் 

Updated On :17 ஜூன் 2018, 9:37 am

பழங்கதை பேசி பாடித் திரிந்தவர்கள்
பாரத பெருமையை மறந்துவிட்டோம்.
புதுமை என்ற பெயரைச் சொல்லி
புரியாத புதிராக மாறிவிட்டோம்.

அரிய புராணங்கள் அறிந்தவர்கள்
அழிவை நோக்கிச் சென்றனர்.
சிறிய நிகழ்வைப் பெரிதாக்கியே
சிந்தையை மாற்றிக்கொண்டோம்.

பெருமைகள் நிறைந்த பூமியில்
பேரிடர் நிறைந்து போனதே.
அருமை தெரியா மானிடர்கள்
அற்புதம் அறியா மூடர்களே.

எத்தனையோ அதிசயங்கள்
எத்தர்களால் அழிந்தன.
பித்தனாக தன்னை மாற்றியே 
பிதற்றத் தொடங்கிவிட்டனரே.   

விந்தை மிகு பூமி வாழவே 
விசித்திரம் போற்றுவோம்.
மிச்சத்தை மீட்டிடுவோம்
மேன்மையைக் காத்திடுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.