/
பழைய தலைமுறை பண்புகளை கைக்கொண்டோமா இன்றைய தலைமுறைப் பண்புகளை மேற்கொண்டோமா தலைமுறைகள் மாறினாலும் நமது பண்புகள் மாறுவதில்லை தலைமுறைகள் விட்டுசென்றதை மனித மனங்கள் ஏற்பதில்லை !வாழ்க்கை என்றும் ஒரு எந்திரியமயமாக கருதப்படுதே நிற்பதற்கும், பேசுவதற்கும் நேரம் இல்லமால் போனதே பாவ புண்ணியங்களுக்கு சற்றே பயந்து நடப்போம் வரும் தலைமுறைக்கு புண்ணியத்தை அளிப்போம் !பசுவும், தன் பாலை மிச்சம் வைத்து தன் குட்டிகளை காப்பாற்றும்அதனிடம் கருணை காட்டாது தன் பசிக்காக அதனை கொல்வோம் ஆடு,மாடுகள் உண்ட மிச்சமே பூமிக்கு சத்துள்ள எருவாகிறது மனிதனின் மிச்சமோ மனிதனே தீண்டத்தக்கதாக அமைகிறது !மனிதன் பல இனங்களானாலும் அவன் குருதி செந்நிறமே பணத்தாலும் ,அறிவாலும் மனித இனமும் வேறுபட்டு நிற்குமே ஏழை, பணக்கார ஜாதி என்றும் தலை தூக்கி நிற்குமே பணக்காரர்கள் போட்ட மிச்சத்தை உண்டுவாழும் ஏழை இனமே !ஏழை கடைசி வரை ஏழையாகவே வாழ்ந்து இறக்கின்றான் தன் ஏழ்மையை என்றும் தானமாக விட்டு செல்கின்றான் பணக்காரனோ மேன்மேலும் தன் தலைமுறைக்குச் சேருகிறது மடுவிற்கும், மலைக்கும் உள்ள இடைவெளியே உதாரணமாகிறது !ஒருவன் நல்ல நிலையில் இருந்தால், முன்னோர் செய்த புண்ணியமா ஏழையாய் இருப்பதும் முன்னோர் செய்த தீமையான காரியமா வள்ளுவன் சொன்ன எச்சத்தாரால் மிச்சத்தை மீட்க முடியுமா விட்டுச் சென்றதை நடுநிலைமை கொண்டுதான் தீர்க்கமுடியுமா !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

