/
வழித்துவிட்ட தலைமொட்டை போல நாட்டை வறட்சியிலே தள்ளிவிடும் செயலை விட்டேஅழித்ததுபோய் காடுகளில் மிச்சம் தன்னை அடுத்துவரும் தலைமுறைக்காய் மீட்ட ளிப்போம் !குழிபோட்டு குழிபோட்டுப் பூமிக் குள்ளே குழாய்விட்டே இருக்கின்ற நீரெ டுத்தேவிழிபிதுங்கிச் சந்ததியர் தாகத் தாலே விக்கியுயிர் விட்டிடாமல் மிச்சம் வைப்போம் !அறிவியலின் முன்னேற்றம் என்று சொல்லி அதிவிரைவு வாகனங்கள் சாலை ஓட்டிப்பொறிபறக்க நச்சுபுகை பரவ விட்டுப் பொலிவான சுற்றுபுறம் காற்றை யெல்லாம்வெறியோடு மாசுசெய்தே எச்சத் தார்கள் வெவ்வேறு நோய்களிலே துடிது டிக்கத்தறிகெட்டுப் போகாமல் தூய்மை காத்துத் தந்திடுவோம் இயற்கையினைச் செம்மை யாக !மலைகளினை தகர்த்திட்டோம் குளங்கள் ஏரி மனைகளாக்கி விற்றுவிட்டோம் ஆற ழித்துவிலைபேசி மணலள்ளி மலடு செய்தோம் விளைநிலத்தில் சாலைபோட்டு வாழ்வி ழந்தோம் !தலைமுறையாய்க் காத்துவந்த வளத்தை யெல்லாம் தாரைவார்த்துச் சந்ததியைத் தவிக்க விட்டோம்வலைதுடிக்கும் மீன்கள்போல் வருங்கா லந்தாம் வாய்த்திடாமல் இயற்கையினை மீட்போம் வாரீர் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

