/
தண்ணீரே வாராதத் தெருக்கு ழாய்கள் தாரின்றிக் கல்குத்தும் வீதிச் சாலைமண்சேறாய்ச் சாக்கடைநீர் தேங்கும் முற்றம் மறந்துமொளி வீசாத மின்கம் பங்கள்கண்மறைக்கும் ஆளுயர விளம்ப ரங்கள் காட்சிதரா ஆட்சியாளர் என்றே நாளும்எண்ணற்ற பிரச்சனைகள் எதிரில் நிற்க எவரேனும் கேட்பதற்கு வந்த துண்டா !இயற்கையினை அழிக்கின்றார் ! சுற்றுச் சூழல் இனியகாற்றை மாசாக்கிக் கெடுக்கின் றார்கள்வயல்ஏரி குளங்களினை விற்கின் றார்கள் வளம்தந்த ஆற்றுமணல் அள்ளு கின்றார்அயல்மொழியில் கல்விதந்து வணிக மாக்கி அன்னைமொழி தமிழ்மொழியை ஒதுக்கு கின்றார்செயல்பட்டே இவைகளினைத் தடுப்ப தற்குச் செழுந்தோளார் எவரேனும் வந்த துண்டா !அரசியலார் செய்கின்ற தவற்றைக் கேட்க அரசாங்க அலுவலர்கள் கையூட் டோட்டக்குரலெடுத்து முழக்கமிட்டே ஒருவ ரேனும் கூடிடுவோம் ஒற்றுமையாய் என்ற துண்டாவிரல்நீட்டிக் கயவரினைச் சுட்டி நீங்கள் விரட்டுதற்கே ஒருமுறைதாம் எழுந்து விட்டால்வரலாற்றை மாற்றிடலாம் ! தூய ஆட்சி வளவாழ்வு இங்கமையும் வாரீர் வாரீர் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை! இபிஎஸ் விளக்கம்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா புதிய சாதனை!
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

