தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஒருமுறையேனும்: பி.பிரசாத்

Updated On :25 ஜூன் 2018, 9:50 am
ஒருங்கிணைத்து, வழிகாட்டி  ஒருகுழுவை நடத்திடவேஒருதலைவன் வேண்டுமதில்  சந்தேகம் ஏதுமிலை !தலைவனவன் காட்டும்வழி  கண்மூடி செல்லுதலோவலைதன்னில் வலிந்தேநாம்   வீழ்தல்போல் ஆகிடுமே !சொன்னவழி நல்வழியா?  சிறந்ததொரு நன்முறையா?என்றுஒரு முறையேனும்  சுயமாக சிந்திப்போம் !தவறென்றால் தலைவனிடம்  தயங்காமல் எடுத்துரைப்போம் !எவருக்கும் பயந்தேநாம்  எதையும்தான் செய்யோமே !சரியென்ற வழியதுவே  நமைசேர்க்கும் நல்லிடமே!'சரி'யென்று யாவைக்கும்..  சரியின்று சொல்லோமே !ஆடுகளின் கூட்டம்போல்  அலைந்தேபின் செல்லோமே !கேடுவரும் எனதெரிந்தும்   கெட்டவழி செல்லோமே !ஒருமுறையே தானும்நாம்  செய்யும்முன் சிந்திப்போம் !ஒருகுறையும் வாராதே !  வந்தாலும் எதிர்கொள்வோம் !எண்ணியேநீ துணிகவென‌   சொன்னானே அன்றேதான் !கண்மூடி செல்லாமல்   கருத்தோடு சிந்திப்போம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.