/
ஒருமுறையேனும்... உண்மையாய் நேர்மையாய் உளம்விரும்பிமக்களின் நலனில் மகத்தான விருப்பங் கொண்டேஅரசியல்வாதிகள் அத்தனைபேரும் செயல் பட்டாலேசிரமங்கள் மறைந்து சிரித்திடாரோ சாமானியர்கள்?!ஒருமுறையேனும்... உளத்தின் ஆழத்தில் நினைத்து எல்லாம் வல்ல இறைவனோடு ஒன்றிநல்லதே நடக்க நயவஞ்சகம் ஒழித்து இறைஞ்சிக் கேட்டால் இல்லையென்பானோ இறைவன்?!ஒருமுறையேனும்...காந்தியாய் நம்மை உருவகஞ்செய்துஉண்மையை மட்டுமே உளமெங்கும் நிறைத்துசெய்யுந் தொழிலை தெய்வமென மதித்து நடந்து கொண்டால் நாமுய்வோம் நன்றாய்!ஒருமுறையேனும்...வாஞ்சிநாதன், வ.ஊ.சி.,கட்டபொம்மன்பட்ட துயரைப் படித்தாவது அறிந்தால்சுதந்திரம் மீது நமக்கு சொல்லொணாப் பற்றுவெள்ளமென பெருகும்! வீண்ஜம்பங்கள் குறையும்!ஒருமுறையேனும்...வள்ளுவன்வகுத்த வான்குறள் தன்னைசெம்மையாய்ப் படித்து சிறப்பாய் அதன்படிநடந்தே காட்டினால் நானிலம் மெச்சும்பிறந்த பயனையும் பெருமையாய் அடையலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

