மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

என்றும் என் இதயத்தில்: சா. கா. பாரதி ராஜா

Updated On :27 மே 2018, 11:06 am

நீயும் நானும்
எதிரெதிர் துருவம் தான்!
நீ செல்ல செல்ல
பின் தொடர்கிறேன் நான்!

செதில் செதிலாய்
உடைத்தாலும்
அனைத்திலும் பிரியாமல்
நீயும் நானும்!

பிறர் உடைக்கும்போது
இரு துருவங்களாகிய நமக்குள்
அதிகமாகிக்கொண்டே போகிறது
நெருக்கம்!

நமக்குள் என்றும்
ஈர்ப்பு விசை!
நாம் மட்டும் உணரும்
காதல் விசை!

முகங்காணா நாமிருவரும்
கட்டிய காதல்கோட்டை
காந்த புலம்!

பரிமாறிக் கொண்ட
முத்தங்களாய்
சிதறிக் கிடக்கும்
இரும்புத் துகள்கள்!

இரும்பு நெஞ்சங்களும்
காதலர்களாய் மாறுகின்றன
காதல் மின்சாரம்
பாய்ந்ததாலோ!

இங்கே
காதல் பண்பை
இழந்து விடுபவர்கள்
திடீர் காதலர்கள்!

இறுதிவரை
காதலை இழக்காமல்
வாழ்கிறார்கள்
இயற்கைக் காதலர்கள்!

பூமியின் அதிசயமாய்
இருக்கும் நாம்...
உணர்த்துகிறோம்
காதல் அழிவதில்லையென்று!

காந்தப் புலத்தில்
இரு காதல் துருவங்களாய்
என்றும் காதல் புரிவோம்!
என்றும் நீ
என் இதயத்தில்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.