முண்டத்தில் பொலிந்து இலங்கு மேனியானே முதலாகி நடுவாகி முடிவானானே
கண்டத்தில் வெண் மருப்பின் காறையானே கதநாகம் கொண்டாடும் காட்சியானே
பிண்டத்தின் இயற்கைக்கோர் பெற்றியானே பெருநில நீர் தீ வளி ஆகாசமாகி
அண்டத்துக்கு அப்பாலாய் இப்பாலானே அவனாகில் அதிகை வீரட்டனாமே

விளக்கம்

முண்டம் என்ற சொல்லுக்கு மூன்று கீற்றாக அணிந்த திருநீறு என்று சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணியம் அவர்கள் தனது பெரியபுராண விளக்கவுரை புத்தகத்தில் பொருள் கூறுகின்றார். மாணிக்கவாசகர் தனது அச்சப்பத்து பதிகத்தில் திருமுண்டம் தீட்டமாட்டாது அஞ்சுவர் என்று நெற்றியில் திருநீறு இட்டுக்கொள்ள கூச்சம் அடையும் மனிதர்களை குறிப்பிடுவதை நாம் இங்கே கருத்தில் கொள்ளலாம். மஞ்சு = மேகம்: உரும் = இடி; செஞ்செவே = உறுதியாக,

மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோடு உறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுதம் ஆக்கும் நம்பிரான் எம்பிரானாய்
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது
அஞ்சுவார் அவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

முண்டம் என்பதற்கு தலைமாலை என்று பொருள் கொண்டு, பிரமன் திருமால் மற்றும் பல தேவர்களின் தலையைக் கொண்டு கோர்க்கப்பட்ட மாலையினை அணிந்தவன் என்று பொருள் கூறுவார்கள். இதே அடியில் தொடர்ந்து வரும் முதலாகி நடுவாகி முடிவானானே என்ற தொடருக்கு பொருத்தமாக இந்த விளக்கம் உள்ளதை நாம் உணரலாம். எனவே இரண்டு விதமான விளக்கங்களும் பொருத்தமாக காணப்படுகின்றன, முதல் நடு முடிவு = தோற்றம், நிலைத்து நிற்கும் செயல் மற்றும் அழிவு; காறை = கம்பியாக கோர்த்து அணியும் அணிகலன்: மருப்பு = கொம்பு, இங்கே பன்றியின் கொம்பு என்று கொள்ள வேண்டும். பிண்டம் = உடல்;

கேழல் வெண்கொம்பு அணிந்த பெம்மான் என்று பல தேவாரப் பாடல்களில், பன்றியாக அவதாரம் எடுத்த திருமாலின் செருக்கினை அடக்கி, அதன் அடையாளமாக பன்றியின் கொம்பினை உடைத்து ஆபரணமாக அணிந்தவன் சிவபெருமான் என்று கூறப்படுகின்றது. பன்றியாகிய திருமால் வழிபட்ட செய்தி சிவபுரம் தலத்தின் மீது சம்பந்தர் அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றில் (1.21.7) கூறப்படுகின்றது. கதமிகு = கோபம் மிகுந்த; உகிர் = நகம்; வடவரை = மேரு மலை: மதமிகு = செருக்கு மிகுந்த; நெடுமுகன் = நீண்ட முகத்தினை உடைய திருமால்; மதி திகழ் எயிறு = சந்திரனின் வளைந்த பிறை போன்ற பற்கள்; நுதி = நுனி; இதமமர்புவி = இதமாக அமர்ந்த பூமி.

கதமிகு கரு உருவொடு உகிரிடை வடவரை கணகண என
மதமிகு நெடுமுகன் அமர் வளை மதி திகழ் எயிறு அதன் நுதி மிசை
இதம் அமர் புவி அது நிறுவிய எழில் அரி வழிபட அருள் செய்த
பதம் உடையவன் அமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர் படியிலே

பொழிப்புரை

மூன்று கீற்றுகளாக உள்ள திருநீற்றினை உடலெங்கும் அணிந்து அழகுடன் பொலிபவன் சிவபெருமான்; அவனே உலகின் தோற்றமாகவும், நிலைபெற்று இருக்கும் தன்மையாகவும், அழிவாகவும் உள்ளவன்; கழுத்தினில் பன்றியின் கொம்பினை கோர்த்த அணிகலனை அணிந்தவன்; கோபம் கொண்ட பாம்புகளை அணிந்து கொண்டு நடனமாடும் காட்சியினை நமக்கு அளிப்பவன்: அனைத்து உயிர்களின் பின்னணியில் உள்ள தத்துவங்களுக்கு ஆதாரமாக உள்ளவன்; நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களாக உலகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பவன், இத்தகைய தன்மைகளைக் கொண்ட சிவபெருமான் அதிகை வீரட்டானத்தில் உறையும் பெருமான் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
உதகை தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா காங்கிரஸ்?

கா்நாடக துணை முதல்வருடன் ஸ்டாலின் பிரசாரம் செய்வது துரோகம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை