ஒழித்திடுமே உள்குவார் உள்ளத்து உள்ள உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக் கண்ணால்
விழித்துடுமே காமனையும் பொடியாய் வீழ வெள்ளப் புனல் கங்கை செஞ்சடை மேல்
இழித்திடுமே ஏழுலகும் தானாகும்மே இயங்கும் திரிபுரங்கள் ஓர் அம்பினால்
அழித்திடுமே ஆதி மா தவத்துளானே அவனாகில் அதிகை வீரட்டனாமே

விளக்கம்

உறுபிணி = பழைய வினைகள்: செறுபகை = காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் ஆகிய ஆறு உட்பகைகள்: இழித்தல் = இறங்கச் செய்தல்: மிகுந்த ஆரவாரத்துடன் கீழே இறங்கிய கங்கையால், உலகம் அடித்துச் செல்லப்பட்டு பாதாளத்தில் சேராமல் இருப்பதற்காக, கங்கை நதியைத் தனது சடையில் ஏற்ற சிவபெருமான், பின்னர் பகீரதனின் நிலை கருதி அவனுக்கு அருள் செய்யும் வண்ணம், கங்கை நதியைத் தனது சடையிலிருந்து பூமியில் பாயுமாறு செய்தார். இந்த நிகழ்ச்சி, சம்பந்தர் அருளிய தேவாரப் பாடல் ஒன்றினில் கூறப்பட்டுள்ளது.

ஓமமாம்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (3.122) மூன்றாவது பாடலில் சம்பந்தர் இந்த அருட்செயலைக் குறிப்பிடுகின்றார். தராதலம் = பூமி. கரந்த = மறைத்து வைத்திருந்த. தனது சடையில் மறைத்து வைத்திருந்த கங்கை நீரினைத் தனது சடையில் தாங்குவதைத் தவிர்த்து, சிறிது சிறிதாக பூமியில் பாயும்படி அருள் செய்தவர் சிவபெருமான் என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார். ஒமமாம்புலியூர் தலத்தில் வாழ்ந்து வந்த அந்தணர்கள் தங்களது அழகிய கைகளால் வேள்வி வளர்த்து, ஆகுதி அளித்த செய்கை இங்கே குறிப்பிடப்படுகின்றது.

பாங்குடைத் தவத்து பகீரதற்கு அருளிப் படர்சடைக் கரந்த நீர்க் கங்கை
தாங்குதல் தவிர்த்துத் தராதலத்து இழித்த தத்துவன் உறைவிடம் வினவில்
ஆங்கு எரி மூன்றும் அமர்ந்து உடனிருந்து அங்கையால் ஆகுதி வேட்கும்
ஓங்கிய மறையோர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே

பொழிப்புரை

தன்னை நினைந்து தியானம் செய்யும் அடியார்களின் பழவினைகளையும், காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் ஆகிய அவர்களது ஆறு உட்பகைகளையும் அடியோடு ஒழிக்கும் கருணை உள்ளம் கொண்டவன் சிவபெருமான். தனது நெற்றியில் தனித்து இருந்த ஒற்றைக் கண்ணினை விழித்து, தனது தவத்தினை கலைக்க முயற்சி செய்த மன்மதனை சாம்பல் பொடியாக விழுமாறு அழித்தவன் சிவபெருமான். தனது சடையில் ஏற்றி மறைத்து வைத்திருந்த கங்கை நதியை, பகீரதனின் வேண்டுகோளுக்கு இணங்கி, சிறிய நதியாக பூமியில் பாயுமாறு செய்தவன் சிவபெருமான். ஏழு உலகங்களும் இயங்குவதற்கு காரணமாக இருப்பவனும் அவனே. திரிபுரத்து மூன்று அரக்கர்களின் விருப்பப்படி வானில் திரிந்து வந்த மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினால் அழித்த வல்லமை படைத்தவன் சிவபெருமான். பண்டைய நாளில் மேன்மையான தவத்தில் ஆழ்ந்து, தவம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை அனைவர்க்கும் உணர்த்தியவன் சிவபெருமான். இத்தகைய தன்மைகளைக் கொண்ட சிவபெருமான் அதிகை வீரட்டானத்தில் உறையும் பெருமான் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
உதகை தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா காங்கிரஸ்?

கா்நாடக துணை முதல்வருடன் ஸ்டாலின் பிரசாரம் செய்வது துரோகம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை