மாலாகி மதமிக்க களிறு தன்னை வதை செய்து மற்றதனின் உரிவை கொண்டு
மேலாலும் கீழாலும் தோன்றா வண்ணம் வெம் புலால் கை கலக்க மெய் போர்த்தானே
கோலாலம் பட வரை நட்டு அரவு சுற்றிக் குரைகடலைத் திரை அலறக் கடைந்து கொண்ட
ஆலாலம் உண்டு இருண்ட கண்டத்தானே அவனாகில் அதிகை வீரட்டனாமே

விளக்கம்

கோலாலம் = மிகுந்த ஓசை: பாற்கடலிலிருந்து கிடைக்கும் அமுதத்தை உண்ணலாம் என்ற ஆசையுடன், அனைத்து அரக்கர்களும் தேவர்களும் இணைந்து செயல்பட்டதால் எழுந்த ஆரவாரம்: மேலும் கடல் கடையப்படுவதால் கடல் அலைகள் மேலும் மிகுத்து காணப்படுவதால் ஏற்படும் ஆரவாரம்: மிகுந்த ஆரவாரத்துடன் கடல் கடையப்பட்ட போது, திரண்டு எழுந்த நஞ்சு என்று மணிவாசகரும் திருவாசகத்தின் பாடல் (திருச்சாழல் பதிகம்) ஒன்றினில் கூறுகின்றார். கோலாகலம் என்ற சொல் கோலாலம் என்று திரிந்தது. அனைவரும் அமுதம் அருந்துவதற்காக காத்திருக்கையில் நஞ்சை உண்டது எந்த விதத்தில் சாமர்த்தியமான செயலாக கருதப்படும் என்பது இந்த பாடலின் முதல் இரண்டு அடிகளில் எழுப்பப்படும் கேள்வி. வீடுவர் = அழிந்துவிடுதல்; இந்த கருணைச் செயல் பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது.

கோலாலம் ஆகி குரைகடல் வாய் அன்றெழுந்த
ஆலாலம் உண்டான் அவன் சதுர் தான் என்னேடி
ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட
மேலாய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ

இந்த பாடலில் கடைந்துகொண்ட ஆலாலம் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது நாம் உணரத் தக்கது. கடலிலிருந்து கொடிய விடமாகிய ஆலாலம் தானே எழவில்லை. பிறந்தவர் அனைவரும் ஒருநாள் இறந்தே ஆகவேண்டும். இந்த உண்மையை உணராமல், அறிவிலிகளாக திகழ்ந்த தேவர்களும் அசுரர்களும், அமுதம் உண்டால் தாங்கள் இறப்பில்லாமல் வாழலாம் என்ற நம்பிக்கையுடன் பாற்கடலை கடைந்தார்கள். அவ்வாறு அவர்கள் பாற்கடலைக் கடையும் முயற்சியில் கடலிலிருந்து எழுந்தது நஞ்சு. எனவே ஆலகால விடத்தை, தங்களது செய்கையால் அவர்கள் தேடிக் கொண்டார்கள். இந்த செய்தியை உணர்த்தவே, அப்பர் பிரான் இங்கே கொண்ட ஆலாலம் என்று அடைமொழி கொடுக்கின்றார்.

இந்த பாடலில் இரண்டு வீரச் செயல்கள் குறிப்பிடப்படுகின்றன. முதலாவது யானையின், பசுந்தோலைத் தனது உடலில் போர்த்தது, இரண்டாவது அனைவரையும் அஞ்சி நடுங்கவைத்த கொடிய விடத்தை உண்டது. யானையின் பசுமையான தோல் நமது உடலில் பட்டால், உடலுக்கு ஊறு விளைவிக்கும் தன்மை வாய்ந்தது என்று நச்சினார்க்கினியர் தனது சீவக சிந்தாமணி உரையில் கூறுகின்றார். ஆனால் பெருமான், இந்த இரண்டு செயல்களை செய்த பின்னரும், உயிருடன் இருந்ததும், அவரது உடலுக்கு கேடு ஏதும் ஏற்படாமல் இருந்ததும், பிறப்பு மற்றும் இறப்பினை கடந்தவர் சிவபெருமான் என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.

பொழிப்புரை

மிகுதியான மதத்தினால், தான் செய்வது இன்னது என்று அறியாத நிலையில் பெருமானை நோக்கி பாய்ந்து வந்த, கொலைத் தன்மை கொண்ட யானையை வதைத்து, அதன் தோலை உரித்தவர் சிவபெருமான். மேலும் புலால் மணம் மாறாத அந்த யானையின் பசுந்தோல், தனது உடலினை முற்றிலும் மறைக்குமாறும், யானையின் தோலிலிருந்து ஒழுகும் பசும் இரத்தம் தனது உடலில் கலக்குமாறும், தனது உடலின் மேல் பாகம் மற்றும் கீழ் பாகங்களின் மீது போர்த்தவர் சிவபெருமான். மிகுந்த ஆரவாரத்துடன், மந்தர மலையை மத்தாக நட்டு, அந்த மலையினை வாசுகி பாம்பினால் சுற்றி, பாற்கடலின் அலைகள் கீழ்மேலாக வருமாறு தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடைந்தார்கள். அவ்வாறு கடைந்த செய்கையால், பாற்கடல் பொங்கி கொடிய ஆலால விடம் வெளிவரும் சூழ்நிலை ஏற்பட்டது. அனைவரையும் காப்பாற்றும் கருணை உள்ளத்துடன், அந்த ஆலால விடத்தினைத் தான் உண்டு, அதனால் கருமை நிறம் கொண்டதாக மாறிய கழுத்தினை உடையவர் சிவபெருமான். இத்தகைய தன்மைகளைக் கொண்ட சிவபெருமான் அதிகை வீரட்டானத்தில் உறையும் பெருமான் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
உதகை தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா காங்கிரஸ்?

கா்நாடக துணை முதல்வருடன் ஸ்டாலின் பிரசாரம் செய்வது துரோகம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை