சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!

6. ஈன்றாளுமாய் எனக்கு - பாடல் 5

சிவபிரானின் அருளைப் பெறுவதற்கான வழி இங்கே நமக்கு சொல்லிக் கொடுக்கப்படுகின்றது.

Updated On :4 நவம்பர் 2015, 7:45 am

வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்துச்
சித்தம் ஒருக்கிச் சிவாயநம என்று இருக்கின் அல்லால்
மொய்த்த கதிர்மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்
அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே

விளக்கம்

பேதை = பேதமையால் மயங்கிக் கிடத்தல். பேதமை = அறியாமை. மொய்த்த = நிறைந்த, அடர்ந்த

ஒன்றி இருந்து நினைமின்கள் என்று தில்லைப் பதிகத்தில் (கருநட்ட கண்டனை என்று தொடங்கும் பதிகம் - 4.81) கூறிய அப்பர் பிரான் இங்கே மனதினை ஒருநிலைப்படுத்தி சிவாயநம என்ற நாமத்தைச் சொல்லுமாறு நம்மைத் தூண்டுகின்றார். இந்த பாடலும் தனது நெஞ்சினை நோக்கி அறிவுரை சொல்லும் பாடலாக அமைந்திருந்தாலும், நமக்குச் சொல்லும் அறிவுரையாக அமைந்துள்ளது. சிவபிரானின் அருளைப் பெறுவதற்கான வழி இங்கே நமக்கு சொல்லிக் கொடுக்கப்படுகின்றது.

ஒன்றி இருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை

கன்றிய காலனை காலால் கடிந்தான் அடியவற்காச்

சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்

என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே

ஆணவ மலமாகிய அறியாமை நமது மனத்தினை மறைத்து இருப்பதால், உண்மையான மெய்ப் பொருளாகிய சிவபிரானிடத்தில் நாட்டம் இல்லாமல் நாம் இருக்கின்றோம். சிவபிரானை உணரும் அறிவு மட்டுமே அறிவாக அப்பர் பிரானால் கருதப்படுவதால், அவ்வாறு இல்லாத நெஞ்சத்தை அறிவிலாத பேதை நெஞ்சம் என்று கூறுகின்றார்.

உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் நிலையற்றவை. என்றேனும் ஒரு நாள் அழிந்து விடக் கூடியவை. உயிர் பிரியும் போது எடுத்துச் செல்ல முடியாதவை. ஆனால் சிவபிரானை எப்போதும் நினைத்து அந்த நினைவினால் நாம் பெரும் ஞானம் வீடுபேற்றினை பெறுவதற்கு வழி வகுப்பதால், அது தான் அழியாத சேமிப்பாக கருதப் படுகின்றது.

மொய்த்த கதிர் போல்வார் அவர் பாதிரிப்புலியூர் அத்தன் என்பதற்கு, நிறைந்த ஒளியினை உடைய சந்திரனின் கிரணங்கள் போன்று குளிர்ந்த தன்மை கொண்ட (உயிர்கள் பால் கொண்ட கருணையால்) பாதிரிப்புலியூர் தலைவன் சிவபிரான் என்றும் பொருள் கொள்ளலாம்.

பொழிப்புரை

அறிவிலாமல் மயங்கிக் கிடக்கும் நெஞ்சமே, உனது மனதினில் சிவபிரானைப் பற்றிய சிந்தனைகளை அடக்கி, சித்தத்தை ஒன்ற வைத்து சிவாயநம என்ற மந்திரத்தினைக் கூறின் அல்லால், அடர்ந்த ஒளியினை உடைய சந்திரனைப் போன்று பல கலைகளில் தேர்ந்த அந்தணர்கள் வாழும் திருப்பாதிரிப்புலியூரில் உறையும் தலைவனாகிய சிவபெருமானின் அருளைப் பெறுதல் இயலாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.