மண் பாதலம் புக்கு மால் கடல் மூடி மற்று ஏழுலகும்
விண் பால் திசை கெட்டு இரு சுடர் வீழினும் அஞ்சேல் நெஞ்சே
திண் பால் நமக்கு ஒன்று கண்டோம் திருப்பாதிரிப்புலியூர்க்
கண் பாவு நெற்றிக் கடவுள் சுடரான் கழல் இணையே

விளக்கம்

இரு சுடர் = தூமகேது என்ற கோளும், மற்ற நட்சத்திரங்களும். திண் = வலிமையான பால் = பற்றுக் கோடு, திண்பால் என்றால் உறுதியான இடம் என்றும் பொருள் கொள்ளலாம். திண் பால் நமக்கு ஒன்று கண்டோம் என்று வலிமையான பற்றுக்கோடு ஒன்றினை தான் கண்டதாக அப்பர் பிரான் கூறுவதன் காரணம், கடலில் தள்ளிவிடப்பட்ட தன்னை, கடலில் ஆழாமால் காத்து கரையேற்றிய கருணையை நினைந்து என்பதாம்.

பூமி பிளத்தல், பிளவின் வழியே பூமி மண் இறங்குதல், கடல் நீர் பெருக்கெடுத்து உலகினை மூடுதல், தூமகேது என்ற கோளும், மற்ற நட்சத்திரங்களும் கீழே விழுதல் முதலிய நிகழ்ச்சிகள் உலகினில் பெரும்கேடு விளைவிக்கும் என்ற நம்பிக்கை உண்டு.

மணமாகாத பெண் ஒருத்தி, சிவபிரானின் அடியார் தனக்கு கணவராக வாய்த்துவிட்டால் தனக்கு எந்த குறையும் இல்லை என்றும், அத்தகைய வரம் கிடைத்தால், கிழக்கில் உதிக்கும் சூரியன் எங்கு உதித்தாலும் தனக்குக் கவலை இல்லை என்று கூறுவதாக ஒரு திருவெம்பாவை பாடல் உள்ளது. திருமணத்தில் பெண்ணை கைப்பிடித்து, அவனது மணாளனின் கையில் ஒப்படைக்கும் சமயத்தில், உனக்கு அடைக்கலமாக வந்துள்ள பெண் என்று சொல்வது வழக்கம். இந்தச் சொல் தொன்றுதொட்டு வருவதால் பழஞ்சொல் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. அவ்வாறு தனக்கு அமையப்போகும் மணாளன், சிவனடியாராக இருக்க வேண்டுமே என்ற கவலை உள்ள பெண்மணி வேண்டுவதாக அமைந்துள்ள பாடல்.

உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் என் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்கே
எம் கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எம் கண் மற்று ஒன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம் கோன் நல்குதியேல்
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்

பொழிப்புரை

நெஞ்சமே, நிலநடுக்கம் (பூகம்பம்) ஏற்பட்டு பூமி பிளந்து பாதாளத்துடன் இணைந்தாலும் உலகெங்கும் கடல்நீர் மூடினாலும், ஏழுலகங்கள் வீழ்ந்தாலும், வானில் தங்களுக்கு உரிய இடங்களிலிருந்து சூரியன் சந்திரன் பெயர்ந்து விழுந்தாலும் நீ எதனைப் பற்றியும் கவலை கொள்ளாதே. மிகவும் உறுதியான பற்றுக்கோடாக, திருப்பாதிரிப்புலியூர் நகரத்தில் வீற்று இருக்கும், நெற்றியில் கண் கொண்டுள்ள கடவுளை, ஞானச் சுடரை நான் கண்டுகொண்டேன். அவனது திருவடிகள் நமக்கு காவலாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் 8 சுயேச்சைகள் உள்பட 15 போ் போட்டி

ரூ. 8,000 மதிப்பு ‘இல்லத்தரசி கூப்பன்’ வழங்கி வாக்கு சேகரிக்கும் திமுகவினா்

பிரசாரத்தில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட வேட்பாளா்கள்

திருவேங்கடத்தில் ஜான் பாண்டியன் பிரசாரம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை