முன்னம் அடியேன் அறியாமையினால் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னை அடியேன் உமக்கு ஆளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலை ஆயவர் தம் கடன் ஆவது தான்
அன்ன நடையார் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே

விளக்கம்

முன்னம் = இதற்கு முன்னர். இந்தச் சொல் மூலம் அப்பர் பிரான், தனது கடந்த பிறவியை குறித்ததாகவும் கூறுவார்கள். சமண சமயம், முந்தைய பிறவி மற்றும் மறுபிறவி என்ற கோட்பாடுகளை நம்புவதில்லை. எனவே, தருமசேனராக வாழ்ந்து வந்த நாட்களில் அப்பர் பிரானுக்கும் முந்தைய பிறவி என்ற கோட்பாட்டில் நம்பிக்கை இருந்திருக்க முடியாது. ஆனால், திருவதிகை வந்த பின்னர், அப்பர் பெருமான் சமண சமயக் கோட்பாடுகளை மறந்து சைவ நெறியில் மறுபடியும் நம்பிக்கை வைக்கத் தொடங்கியது, முன்னம் எனப்படும் இந்தச் சொல் மூலம் இங்கே குறிப்பால் உணர்த்தப்படுகின்றது. முன்னம் என்ற சொல்லுக்கு இந்தப் பிறவியில் என்ற பொருள் கொண்டு, தான் சமண சமயம் சார்ந்தது தனது அறியாமையால் என்று திருநாவுக்கரசர் குறிப்பிடுவதாகவும் பொருள் கொள்ளலாம்.

தனக்கு இறைவன் சூலை நோய் அளித்தது, தான் சமண சமயம் சார்ந்து இருந்த தவற்றுக்காக என்று உணர்ந்ததால்தான், தனது தவற்றினை உணர்ந்து சிவபெருமானுக்கு அடிமையாக மாறியதாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகிறார் என்பதும் ஒரு வகையான விளக்கம். அடிமையாக மாறிய தான் ஏதாவது தவறு செய்தால் தன்னை கோபிக்கவும், புளியங்கொம்பால் அடிக்கவும், அவ்வாறு தனக்குத் தண்டனை கொடுப்பதற்கு மகிழ்ச்சி அடையவும் சிவபெருமானுக்கு உரிமை உள்ளது என்பதை, கச்சி ஏகம்பத்தின் மீது அருளிய ஒரு பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிடுவது நாம் இங்கே நினைவுகூரத்தக்கது.

ஓதுவித்தாய் முன் அறவுரை காட்டி அமணரொடே

காதுவித்தாய் கட்ட நோய் பிணி தீர்த்தாய் கலந்தருளிப்

போதுவித்தாய் நின் பணி பிழைக்கில் புளியம்வளாரால்

மோதுவிப்பாய் உகப்பாய் முனிவாய் கச்சி ஏகம்பனே

பொழிப்புரை

அன்னம் போன்ற அழகு நடையைக் கொண்ட மகளிர் வாழும் அதிகை நகரில், கெடில நதியைத் தீர்த்தமாகக் கொண்ட வீரட்டானத்தில் உறையும் சிவபெருமானே, நான் இதற்கு முன்னம் அறியாமையால் செய்த தவறுகளுக்காக என்னை கோபித்து, தண்டைனையாக சூலை நோய் கொடுத்து, நான் செயலேதும் அற்று இருக்குமாறு செய்தீர். நானும் எனது தவற்றினை உணர்ந்து, அதனை திருத்திக்கொண்டு உமக்கு அடிமையாக மாறிவிட்டேன். ஆனால், என்னை வருத்தும் சூலை நோய் இன்னும் நீங்கவில்லை. தயை செய்து அதனை தவிர்க்க வேண்டும். தன்னைச் சரண் அடைந்தவர்களின் துன்பங்களைத் தீர்ப்பதுதான் தலைவராக உள்ளவர்களின் கடமை அல்லவா? எனவே, எனக்குத் தலைவரான நீர்தான், என்னை வருத்தும் சூலை நோயினைத் தீர்த்து அருள்புரிய வேண்டுகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி!
இராக் அதிபராக நிஸார் அமிதி தேர்வு!

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்

சஞ்சு சாம்சன் சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை