சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!

2. கூற்றாயினவாறு - பாடல் 5

காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரை நின்றவர் கண்டுகொள் என்று சொல்லி

Updated On :29 செப்டம்பர் 2015, 6:58 am

காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரை நின்றவர் கண்டுகொள் என்று சொல்லி

நீத்தாய கயம் புக நூக்கியிட நிலைக் கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன்

வார்த்தை இது ஒப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட

ஆர்த்தார் புனலார் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே

விளக்கம்

இகழ்தல் = மீறி நடத்தல்

கயம் = நீர்நிலை

நோக்குதல் = அமிழ்தல்

முந்தைய பாடலில், தான் செய்த தவற்றுக்கு சிவபெருமான் சூலை நோய் தண்டனை கொடுத்ததாகக் கூறும் அப்பர் பிரான், தான் தவறு செய்ததற்குக் காரணம் என்ன என்பதை சற்று நினைத்துப் பார்க்கிறார். தான், அறியாச் சிறுவனாக இருந்தபோது, தனது பெற்றோர்களை இழந்து வருந்திய சமயத்தில், தமக்கையார் சொல்லையும் மீறி சமண சமயம் சார்ந்தது தவறு என்று உணர்கிறார். தன்னைக் காத்தாண்ட தமக்கையாரின் சொற்களை மதிக்காமல் இருந்த நிலையை, இங்கே காத்தாள்பவர் காவல் இகழ்ந்தேன் என்று ஒப்புக்கொள்ளும் அப்பர் பிரான், சமண சமயத்தில் தனக்கு ஒழுங்கான வழிகாட்டுதல் கிடைக்கவில்லை என்பதையும் இந்தப் பாடலில் தெரிவிக்கிறார். சூலை நோய் வருத்திய நிலையில் தனது தமக்கையை வணங்கியபோது, திருநீறு அணிவித்து, இறைவனுக்குப் பணி செய்தால் சூலை நோய் தீரும் என்று வழிகாட்டியதும் நினைவுக்கு வருவதால், தான் செய்த தவற்றின் விளைவை இங்கே உணர்ந்தவராக அப்பர் பெருமான் இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.

பாடலின் முதல் இரண்டு அடிகளுக்கு வேறுவிதமாக சிலர் விளக்கம் அளித்துள்ளார்கள். சமண சமயத்தை ஒரு நீர்நிலையாக உருவகித்து, நீர்நிலையின் கரையில் நின்றிருந்த சமண குருமார்கள், குளத்தின் ஆழம் என்ன என்று வினவியபோது, ஆழம் என்னவென்று விடையளிக்காமல், நீயே இறங்கிக் கண்டுகொள் என்று கூறியதைக் கேட்ட தான், குளத்தில் இறங்கி அமிழும் நிலைக்கு ஆளாகி வெளியே மீண்டு வரும் வழியை அறியாமல் திகைப்பதாகவும், இவ்வாறு சரியான வழிகாட்டுதலைத் தவிர்த்து என்னையே அறிந்துகொள்ளும் வார்த்தையினை இதற்கு முன்னர் (சைவத்தில் இருந்தபோது) கேட்டதில்லை என்றும் அப்பர் பிரான் கூறுவதாகவும் நாம் பொருள் கொள்ளலாம்.

பொழிப்புரை

பெருத்த ஆராவாரம் செய்யும் நீர்நிலைகளை உடைய அதிகை நகரில், கெடில நதியின் கரையில் உள்ள வீரட்டானத்தில் உறையும் சிவபெருமானே, கொடிய சூலை நோய் எனது குடலினை சுருக்கி எனது உடல் உறுப்புகளைச் செயலிழக்கச் செய்துவிட்டது. என்னைக் காத்துக்கொண்டிருந்த தமக்கையாரின் சொற்களை மதிக்காமல் சமண சமயம் சார்ந்தேன். குளத்தின் கரையிலிருந்த காவலர்கள் சரியாக என்னை வழிநடத்தாமையால், குளத்தில் மூழ்கும் நிலையில் உள்ள எனக்கு மீண்டுவரும் வழி என்ன என்று தெரியவில்லை. நீதான் எனக்கு அருள்புரிந்து, நான் மீள்வதற்கு உதவி புரிய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.