தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!

2. கூற்றாயினவாறு - பாடல் 7

திருநாவுக்கரசு நாயனார், மனை வாழ்க்கையில் ஈடுபட்டதாக குறிப்பு ஏதும் பெரிய புராணத்தில் காணப்படவில்லை.

Updated On :29 செப்டம்பர் 2015, 7:00 am

உயர்ந்தேன் மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர் தலை காவல் இலாமையினால்
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தே என் வயிற்றின் அகம்படியே பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திட நான்
அயர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே

விளக்கம்

வயந்தே = வயப்பட்டு (அருளின்)

ஒண்பொருள் = நல்ல வழியில் பெற்ற செல்வம்

திருநாவுக்கரசு நாயனார், மனை வாழ்க்கையில் ஈடுபட்டதாக குறிப்பு ஏதும் பெரிய புராணத்தில் காணப்படவில்லை. மேலும், சிறிய வயதில் சமண சமயம் சார்ந்து துறவியான நிலைதான் குறிப்பிடப்படுகிறது. எனவே, அவர் மனை வாழ்க்கையில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், சமண சமயத்தைச் சார்ந்த பின்னர் பல சமண சமய நூல்களை நன்கு கற்றுத் தேர்ந்து, பிற மதத்தவருடன் வாதங்கள் புரிந்து, அவர்களைத் தனது வாதத்தால் வென்று புகழ்பெற்றதாக அவரது சரித்திரத்திலிருந்து நாம் அறிகிறோம்.

இறைவனைப் பற்றிய சிந்தனை தோன்றாத காலங்களில், மனை வாழ்க்கை, நாம் ஈட்டும் செல்வம், நாம் பெற்ற புகழ் இவை அனைத்தையும் பெரிய பேறாக நாம் நினைத்து மகிழ்கிறோம். அதனால் செருக்கும் அடைகிறோம். ஆனால், இறையுணர்வு ஏற்படும் சமயங்களில், இறைவனைவிட உயர்ந்த செல்வமோ, அவனது புகழைவிட உயர்ந்த புகழோ ஏதும் இல்லை என்பதை நாம் உணர்கிறோம். சிவபிரானை வணங்காமல் சமண சமயத்தில் தான் பெற்ற புகழைப் பெரிதாகக் கருதி வாழ்ந்த வாழ்க்கைக்கு அப்பர் பிரான் இங்கே வருத்தம் தெரிவிக்கிறார் என்றே நாம் பொருள் கொள்ள வேண்டும்.

பொழிப்புரை

கெடில நதிக்கரையில் உள்ள திருவதிகை வீரட்டானத்தில் உறையும் சிவபெருமானே, என்னை சரியாக வழி நடுத்துபவர் எவரும் இல்லாததால், மனை வாழ்க்கை, செல்வம், புகழ் இவற்றைப் பெரிதாக மதித்தேன். உமது அருள்வயப்பட்ட நான், வாழ்க்கையின் இன்பம், செல்வம் மற்றும் புகழ் அனைத்தும் உமது பெருமையின் முன்னே வெறுமை என்பதை உணர்ந்துவிட்டேன். எனவே, உமக்கு அடிமையாக வாழ்வது என்ற முடிவில் இருக்கும் என்னை, கொடிய சூலை நோய் என்னை மிகவும் வருத்துகிறது. எனது குடலுக்குள் புகுந்து, புரட்டியும் அறுத்தும், என்னைப் பல வகையில் துன்புறுத்தும் இந்த சூலை நோயால் நான் மிகவும் அஞ்சி தளர்ந்துவிட்டேன். நீர்தான் இந்த சூலை நோயினை தவிர்த்து அருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.