பொன் போல மிளிர்வதோர் மேனியினீர் புரிபுன் சடையீர் மெலியும் பிறையீர்
துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
என் போலிகள் உம்மை இனித் தெளியார் அடியார் படுவது இதுவே ஆகில்
அன்பே அமையும் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே

விளக்கம்

மெலியும் பிறை = தேய்ந்து ஒரு கலையுடன் நின்ற சந்திரன்

புரிசடை = சுருண்ட சடை

புன்சடை = செம்பட்டை நிறத்தில் உள்ள சடை

பொழிப்புரை

பொன் போன்ற மேனியை உடையவரும், சுருண்டு செம்பட்டை நிறத்தில் உள்ள சடையினை உடையவரும், மெலிந்த நிலையில் தன்னைச் சரண் அடைந்த சந்திரனுக்கு அபயம் அளித்து அவனுக்கு வாழ்வு அளித்தவரும் ஆகிய சிவபெருமானே, கொடிய சூலை நோயினால் எனக்கு ஏற்பட்டுள்ள துன்பம், கவலை ஆகியவற்றைக் களைந்து அருள்புரிவீராக. என்னைப் போன்றவர்கள், உமது கருணையின் திறத்தை அறியாததால், தெளியாத நிலையில் உள்ளனர். கவலைகள் மற்றும் துன்பங்களால் கட்டுண்டு இருக்கும் அடியார்களின் கவலைகளை, துன்பங்களை நீக்கினால், அவர்களும் தெளிவு அடைவார்கள். உலகெங்கும் அன்பே நிலவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி!
இராக் அதிபராக நிஸார் அமிதி தேர்வு!

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்

சஞ்சு சாம்சன் சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை