போர்த்தாய் அங்கோர் யானையின் தோல் புறங்காடு அரங்கா நடமாட வல்லாய்
ஆர்த்தான் அரக்கன் தனி மால்வரைக் கீழ் அடர்த்திட்டு அருள் செய்த அது கருதாய்
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனையான விலக்கியிடாய்
ஆர்த்தார் புனல்சூழ் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே

விளக்கம்

புறங்காடு = சுடுகாடு. ஊருக்கு வெளியே உள்ளதால் புறங்காடு என்று அழைக்கப்படுகிறது.

கயிலை மலையை ராவணன் பெயர்த்தெடுக்க முயற்சி செய்து, அந்த மலையின் கீழ் அமுக்குண்டதும், பின்னர் சிவபிரானின் மனம் மகிழும் வண்ணம் சாமகானம் பாடி அவரது அருள் பெற்ற நிகழ்ச்சியும், பெரும்பாலான அப்பர் பிரானின் பதிகங்களின் கடைப் பாடலில் கூறப்படுகின்றன.

தெருவில் விளையாடும் சிறுவர்கள், தங்களது விளையாட்டில் நமது வீட்டின் ஒரு ஜன்னல் கண்ணாடியை உடைத்தால் நமக்கு உடனே கோபம் வருகிறது. நாம் அந்தச் சிறுவர்கள் குறித்து அவர்களது பெற்றோர்களிடம் வாதாடி, ஜன்னல் கண்ணாடிக்கான பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர்தான் அடுத்த வேலையைச் செய்கிறோம். சிறுவர்களின் விளையாட்டினால் பந்து மறுபடியும் ஜன்னலின் மீது படலாம் என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொண்டு, கண்ணாடியை மாற்றாமலும் இருந்துவிடுவோம். ஆனால், கண்ணாடிக்கான காசை வாங்காமல் விடமாட்டோம். இது மனித இயல்பு.

தான் இருந்த வீட்டையே, கயிலை மலையினை, பெயர்த்தெடுக்க முயற்சி செய்த அரக்கனை, அவன் தனக்கு மிகவும் விருப்பமான சாமகானம் பாடியதற்காக மன்னித்து, அவனுக்கு வரங்கள் அருளிய நிகழ்ச்சி, ஒவ்வொரு பதிகத்திலும் கூறப்படுவதன் காரணம், நாம் இதற்கு முன்னர் எத்தனை பாவங்கள் செய்திருந்தாலும், இப்போது சிவபிரானை மனமுருக வேண்டினால், நாம் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு இறைவனது அருள் பெறலாம் என்ற செய்தியை நமக்கு உணர்த்தவே.

பொழிப்புரை

அதிகமான நீரினை உடையதால், மிகுந்த ஆரவாரத்துடன் ஓடும் கெடில நதிக்கரையில் உள்ள திருவதிகை நகரில் உறையும் இறைவனே, தாருகாவனத்து முனிவர்களால் உன் மீது ஏவிவிடப்பட்ட யானையின் தோலை உரித்து, உனது உடலின் மீது போர்த்திக்கொண்டாய். ஊருக்குப் புறம்பே உள்ள காட்டினை அரங்கமாக மாற்றிக்கொண்டு நடமாட வல்லவனே, தனது வழியில் எதிர்ப்பட்ட கயிலாய மலையைப் பெயர்த்தெடுப்பேன் என்று மிகுந்த ஆரவாரத்துடன் முயற்சி செய்த ராவணனை, முதலில் அவனது செருக்கு அடங்குமாறு மலையின் கீழே அழுத்தி வருத்திய பின்னர், அவன் பாடிய சாமகானத்துக்கு மகிழ்ந்து அவனுக்கு அருள்கள் பல செய்தாய். அதேபோல், முன்னர் நான் செய்த கொடுமைகளைப் பொருட்படுத்தாது, சூலை நோயின் கொடுமையால், வேர்த்தும், புரண்டும், எழுந்தும், விழுந்தும் துன்பப்படும் எனது வேதனைகளை, நீர்தான் களையவேண்டும்.

முடிவுரை

இந்தப் பதிகத்தை, கோதில் திருப்பதிகம் (குற்றமற்ற திருப்பதிகம்) என்று குறிப்பிடும் சேக்கிழார் பெருமானார், இந்தப் பதிகத்தைப் பாடுவதால், ஏழு வகையான பிறப்புகளில் ஏதேனும் ஒன்றாகப் பிறந்து துயரம் அடையக்கூடிய நிலையிலிருந்து நாம் விடுதலை பெறலாம் என்று கூறுகிறார். குடல் சம்பந்தமான நோய்கள் அனைத்தையும், பக்தியுடன் இந்தப் பதிகம் பாடியும் படித்தும் தீர்த்துக்கொள்ளலாம் என்பது பெரியோர்களின் நம்பிக்கை.

அகத்தியர் தேவாரத் திரட்டில், குருவருள் என்ற தலைப்பின் கீழ் இந்தப் பதிகமும், தோடுடைய செவியன் (சம்பந்தர் அருளியது), பித்தா பிறைசூடி (சுந்தரர் அருளியது) பதிகங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பதிகம் பாடிய பின்னர், அப்பர் பிரானுக்கு உலகத்தின் குருவாகிய இறைவனின் அருள் கிடைத்தது. சுந்தரரும் சம்பந்தரும் இறைவன் அருள் பெற்ற பின்னர் பாடிய முதல் பதிகங்கள் மற்ற இரண்டு பதிகங்கள். எனவே, இந்தப் பதிகங்களைத் தினமும் பாடினால் குருவருள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

இந்தப் பதிகம் பாடிய பின்னர், மருள்நீக்கியாரின் சூலை நோய் முற்றிலும் நீங்கியது. நடந்த அதிசயத்தை உணர்ந்த நாயனார், சிவபிரானின் அருளாகிய கடலில் மூழ்கினார் என்று சேக்கிழார் கூறுகிறார். தான் சமண சமயத்தைச் சார்ந்து பிழை செய்தபோதிலும் தன் மீது கருணை கொண்டு இறைவன் அருள் செய்ததை நினைத்து, மகிழ்ச்சியினால் அவரது திருமேனி முழுதும் உரோமங்கள் சிலிர்த்து நிற்க, கண்கள் இடையறாது ஆனந்தக் கண்ணீர் பொழிய, தரையின் மீது பலமுறை புரண்டு வீழ்ந்தார்.

சிவபிரானின் அருளைப் பெறுவதற்குக் காரணமாக இருந்த சூலை நோய்க்கு எவ்விதம் நன்றி சொல்வேன் என்று சூலை நோயினை வணங்கினார். அப்பொழுது, செந்தமிழில் சொல்வளம் கொண்ட பாடலைப் பாடியதால், உமது பெயர் நாவுக்கரசர் என்று உலகினில் விளங்கும் என்ற ஒலி, அனைவரும் வியப்புறும் வண்ணம் வானில் எழுந்தது.

சிவபிரான் பெயர் சூட்டிய மற்ற அடியவர்கள், கண்ணப்பர், சண்டீசர், வன்தொண்டர். இவர்கள் முறையே சுந்தரர், மாணிக்கவாசகர், ராவணன் ஆவர். பின்னாளில், ஞானசம்பந்தரை திருநாவுக்கரசர் சீர்காழியில் சந்தித்தபோது, சம்பந்தப்பெருமான், அப்பரே என்று அழைக்க, இவருக்கு அப்பர் என்ற பெயரும் ஏற்பட்டது. திருநாவுக்கரசர் என்ற பெயரைவிட அப்பர் பிரான் என்ற பெயரால் மக்கள் இவரை அழைக்கலானார்கள். தான் அளித்த பெயரைவிட தனது அடியானாகிய சம்பந்தர் சூட்டிய பெயர் மிகவும் அதிகமாகப் பிரபலம் அடைய வேண்டும் என்பது சிவபிரானின் திருவுள்ளம் போலும்.

தனது பெயர் திருநாவுக்கரசர் என்று சிவபிரான் உலகுக்கு அறிவித்த செய்தியை, அப்பர் பிரான், குறுவித்தவா என்று தொடங்கும் திருவையாறுப் பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிடுகிறார். குறுவித்தல் என்றால் உடல் குறுகுதல். இங்கே உடலைக் குறுக்கி வணங்கிய செயல் உணர்த்தப்படுகிறது. செறிவித்தல் = சிறப்பு செய்தல்

குறுவித்தவா குற்ற நோய் வினை காட்டிக் குறுவித்த நோய்
உறுவித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்தருளி
அறிவித்தவாறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே
செறிவித்தவா தொண்டனேனைத் தன் பொன்னடிக் கீழ் எனையே

கூற்று என்று சொல்லை முதற்சொல்லாகக் கொண்ட நான்காம் திருமுறை, கூற்றுவன் பற்றிய குறிப்புடன் முடிகிறது. கூற்று என்று தனது அச்சத்தை முதல் பாடலில் வெளிப்படுத்தும் அப்பர் பிரான், சிவபிரானால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர், மனவலிமை பெற்றவராகத் திகழ்ந்து, கூற்றுவனைக் கேலி செய்யும் அளவுக்கு மாறியுள்ளதை நாம் இங்கே உணரலாம். சிவபெருமானால் இயமன் உதையுண்டதை, திருமாலும் நான்முகனும் காணமுடியாத சிவபெருமானின் திருப்பாதத்தை, தான் உதைபட்டதால் காணும் வாய்ப்பு இயமனுக்கு கிடைத்தது என்று நகைச்சுவையாகக் கூறுகிறார்.

மேலும் அறிந்திலன் நான்முகன் மேல் சென்று கீழிடந்து
மாலும் அறிந்திலன் மாலுற்றதே வழிபாடு செய்யும்
பாலன் மிசைச் சென்று பாசம் விசிறி மறிந்த சிந்தைக்
காலன் அறிந்தான் அறிதற்கு அரியான் கழலடியே

அப்பர் பிரான் தன்னை உழவாரப் பணியில் ஈடுபடுத்திக்கொண்டு, பலரையும் அந்தத் தொண்டில் ஈடுபடுத்தி, இன்றும் அத்தகைய திருத்தொண்டுக்கு முன்மாதிரியாகத் திகழ்வதற்கு, அவரது தமக்கையார் திலகவதியார்தான் காரணம்.

சூலை நோயால் வருந்திய அவரை விடியற்காலையில் எழுப்பி, திருநீறு அணிவித்து, திருவதிகை கோயிலுக்கு அழைத்துச் சென்றபோது, அவரது தமக்கையார் கையில், அலகு (துடைப்பம்), மெழுகு (சாணி) தோண்டி (கிணற்றிலிருந்து தண்ணீர் இழுக்க குடம்) ஆகியவற்றுடன் சென்றதும், சிவபெருமானது பணியில் ஈடுபடுத்திக்கொள்வதுதான் சூலை நோய் தீர்க்கும் உபாயம் என்று கூறியதும்தான், அவரது வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை நிகழ்த்தியது.

மேலும், இந்த மாற்றம்தான் சமண சமயத்தின் பிடியில் இருந்த தமிழகத்தை மீட்டு சைவ சமய மறுமலர்ச்சி ஏற்படவும் காரணமாக இருந்தது என்றால் மிகையாகாது. அப்பர் பிரானின் வாழ்க்கையில் நடந்த மேற்கண்ட சம்பவத்தை விளக்கும், காஞ்சி ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள், திலகவதியார் மற்றும் அரசி மங்கையர்க்கரசியார் இருவரும் மாதர் குல மாணிக்கங்கள் என்றும், அவர்கள் இருவரும்தான் சைவ சமய மறுமலர்ச்சிக்குத் தமிழகத்தில் வித்திட்டவர்கள் என்றும் கூறுகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி!
இராக் அதிபராக நிஸார் அமிதி தேர்வு!

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்

சஞ்சு சாம்சன் சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை