சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!

3. நாமார்க்கும் குடியல்லோம் - பாடல் 4

சிவபெருமானுக்கு அடிமையாக மாறியதால் பிறப்பில் செல்லோம் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், சிவபெருமானுக்கு அடியார்

Updated On :2 அக்டோபர் 2015, 10:39 am

உறவாவார் உருத்திர பல்கணத்தினோர்கள் உடுப்பன கோவணத்தொடு கீள் உளவாம் அன்றே
செறுவாரும் செறமாட்டார் தீமை தானும் நன்மையாய்ச் சிறப்பதே பிறப்பில் செல்லோம்
நறவார் பொன் இதழி நறுந்தாரோன் சீரார் நமச்சிவாயச் சொல்ல வல்லோம் நாவால்
சுறவாரும் கொடியானைப் பொடியாக் கண்ட சுடர் நயனச் சோதியையே தொடர்வுற்றோமே

விளக்கம்

செறுவார் = பகைவர்

பொன்னிதழி = பொன்னின் நிறத்தினை உடைய கொன்றை மலர்

நறவு = தேன்

தார் = மாலை

சுறவம் = மீன்

சுறவக் கொடியான் = மீன் கொடி உடைய மன்மதன்

சிவபெருமானுக்கு அடிமையாக மாறியதால் பிறப்பில் செல்லோம் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், சிவபெருமானுக்கு அடியார் அல்லாத ஏனையோர் பிறப்பு அறுக்க வல்லாரல்லர் என்பதை இங்கே உணர்த்துகின்றார். மன்மதனை எரித்த கண்களைக் கொண்ட சோதி வடிவினானான சிவபிரானுடன் தொடர்பு கொண்டமையால் தனக்குத் துன்பம் அளிப்பவர் சிவபிரானால் அழிக்கப்படுவார்கள் என்பதையும் இங்கே குறிப்பால் உணர்த்துவதை நாம் உணரலாம். சிவபெருமானுடன் தொடர்வு உற்றோம் என்று அப்பர் பிரான் கூறுவது, தான் மீளா அடிமையாக மாறி அவருக்கு திருப்பணி செய்யும் நிலையை. இந்த நிலை பதிகத்தின் முதல் பாடலில் உணரத்தப் பட்டுள்ளது.

உருத்திர பல் கணத்தோர்=சிவவேடம் தாங்கிய சிவனடியார்கள். சம்பந்தப் பெருமான் திருமயிலைப் பதிகத்தின் முதல் பாடலில், உருத்திர பல்கணத்தார் என்று சிவனடியார்களை குறிக்கின்றார். சிவபெருமானோடு ஒட்டி வாழ்பவர், (சிவபிரான் வேறு அவர்கள் வேறு அல்ல என்ற நிலையை அடைந்தவர்கள்) என்று அவர்களை குறிப்பிடுகின்றார்.

மட்டிட்ட புன்னையங் கானல் மட மயிலைக்

கட்டிட்டம் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்

ஒட்டிட்ட பண்பின் உருத்திரப் பல் கணத்தார்க்கு

அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்

பொழிப்புரை

சிவவேடத்தை உடைய சிவனடியார்கள் அனைவரும் எமக்கு உறவினர் ஆவார்கள். கீளும் கோவணமுமே யாம் உடுப்பன ஆகும். எம்மிடம் வேறு பொருள் ஏதும் இல்லாமையால், பகைவரும் எம்மீது கோபம் கொள்ளமாட்டார்கள். சிவபெருமானின் அடியார் என்பதால், எம்மை அணுகும் தீமைகளும் நன்மையாக மாறிவிடும்; மேலும் சிவபெருமானது அருளால் பிறவிப்பிணி நீங்கப்பெற்று, மீண்டும் மற்றுமோர் பிறவியில் செல்லக்கூடிய நிலை எமக்கு இல்லை. தேன் நிறைந்ததும், பொன்னின் நிறத்தினை உடையதும் ஆகிய கொன்றை மலரை மாலையாக அணியப் பெற்ற சிவபெருமானின் சிறப்பு வாய்ந்த திருநாமமாகிய நமச்சிவாய என்ற சொல்லை எங்களது நாவார சொல்ல வல்ல நாம், மீன் கொடியினை உடைய மன்மதனைத் தனது நெற்றிக்கண் சுடரால் எரித்த, சோதி வடிவினானாகிய சிவபெருமானிடம் தொடர்பு கொண்டுள்ளோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.