என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம் இருநிலத்தில் எமக்கு எதிரா ஆரும் இல்லை
சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
ஒன்றினால் குறை உடையோம் அல்லோம் அன்றே உறுபிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடிப் போனார்
பொன்றினார் தலைமாலை அணிந்த சென்னிப் புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே

விளக்கம்

இடைதல் = கீழ்ப்படிதல்

செறல் = வருத்துதல்

பிணியார் என்று தன்னை வருத்திய சூலை நோயினை இகழ்ச்சிக் குறிப்பு தோன்ற ஆர் என்ற மரியாதை விகுதி கொடுத்து குறிப்பிடுகின்றார். அன்றே ஒழிந்தது என்று சமணர்களை விட்டு தான் நீங்கிய நாளில் தன்னை வெகு நாட்கள் வருத்திய சூலை நோய் ஒழிந்தது என்று அப்பர் பிரான் நினைவு கூறுகின்றார். சமண மடத்தை விட்டு இரவோடு இரவாக திருவதிகை வந்து சேர்ந்த அப்பர் பிரான், அடுத்த நாள் விடியற்காலையில் திருவதிகை திருகோயிலுக்கு, தனது தமக்கை திலகவதியாரால் அழைத்துச் செல்லப்படுகின்றார். அங்கே கூற்றாயினவாறு என்ற பதிகத்தினை பாடி, இறைவனை வேண்டி தனது நோய் உடனே தீரப் பெறுகின்றார். இவ்வாறு மிகவும் விரைவாக தனது துன்பத்தினைத் தீர்த்த இறைவனின் கருணையை, இங்கே அன்றே சூலை நோய் ஒழிந்தது என்று உணர்த்துகின்றார். பொன்றினார் என்றால் இறந்தவர்கள் என்று பொருள். ஊழிக்காலத்தில் அனைத்து உடல்களும் இறந்து அனைத்து உயிர்களும் ஒடுங்கிய பின்னரும், அழியாமல் எஞ்சி நிற்பது சிவபெருமான் ஒருவன் தானே. இதனை உணர்த்தும் விதமாக ஸ்தாணு (நிலையானவன்) என்று அவன் அழைக்கப் படுகின்றான். இந்த வடமொழிச் சொல் தாணு என்ற பல திருமுறைப் பாடல்களில் கையாளப்பட்டுள்ளது.

சிவபெருமானைத் தவிர, திருமால், பிரமன் உட்பட அனைத்துத் தேவர்களும் பிறப்பு இறப்புச் சுழற்சியில் இருந்து விடுபட்டவர்கள் அல்லர். எனவே மற்ற தெய்வங்கள் அனைவரையும் சிறு தெய்வங்கள் என்று குறிப்பிடுவது திருநெறி மரபு. அத்தகைய சிறு தெய்வங்களை புகழ மாட்டோம் என்று மணிவாசகர் திருவாசகத்தில் (திருஏசறவுப் பதிகம் பாடல் 4) கூறுவதை நாம் இங்கே காணலாம்.

பச்சைத் தாள் அரவாட்டீ படர் சடையாய் பாதமலர்
உச்சத்தார் பெருமானே அடியேனை உய்யக்கொண்டு
எச்சத்தார் சிறுதெய்வம் ஏத்தாதே அச்சோ என்
சித்தத்தால் உய்ந்தவாறு அன்றே உன் திறம் நினைந்தே

ஈசன் ஒருவன்தான் நிலையானவன், மற்ற அனைவரும் இறந்து பிறப்பவர்களே என்பதை உணர்த்தும் அப்பர் பிரானின் பாடல் ஒன்று இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடல் வேத நாயகன் என்று தொடங்கும் திருக்குறுந்தொகை பதிகத்தின் ஒரு பாடல். எண்ணற்ற பிரமர்கள் பிறந்து இறந்த பின்னரும், எண்ணற்ற நாராயணர்கள் இறந்த பின்னரும், கங்கைக் நதியின் கரையில் இருக்கும் மணலினை விடவும் அதிகமான எண்ணிக்கை கொண்ட இந்திரர்கள் மறைந்த பின்னும், தனக்கு முடிவு என்பது இல்லாமல் இருக்கும் ஒருவன் ஈசன்தான் என்று இங்கே கூறி, ஏன் ஏனையோர் சிறு தெய்வங்கள் என்று திருமுறையில் கருதப்படுகின்றார்கள் என்பதற்கு அருமையான் விளக்கம் அப்பர் பிரான் இந்த பாடலில் அளிக்கின்றார். ஏறு என்றால் மிக்க என்று பொருள்.

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே

பொழிப்புரை

சிவபெருமானின் திருவடிகளில் சேர்ந்த யாம், சிவபெருமானைத் தவிர வேறு எவர்க்கும் நாம் கீழ்ப்படியோம்; இந்தப் பரந்த உலகினில் எங்களுக்கு இணையானவர்கள் வேறு எவரும் இல்லை; பிறந்து, இறந்து மறுபடியும் பிறக்கும் தன்மை கொண்ட சிறு தெய்வங்களை நாம் சென்று தொழுவோம் அல்லோம்; எமக்கு குறை ஏதும் இல்லை. துன்பம் தரக்கூடிய கொடிய நோய்களும் எம்மை விட்டு ஓடிப் போயின. இறந்த பிரமன் திருமால் ஆகியோரின் தலைகளைத் தலை மாலையாக அணியபெற்ற சிவபிரானை அணுகி புண்ணியம் சேரப் பெற்றுள்ளோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி!
இராக் அதிபராக நிஸார் அமிதி தேர்வு!

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்

சஞ்சு சாம்சன் சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை