பூக் கை கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து
காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே

விளக்கம்

இறைவனின் திருப்பாதங்களில் மலர்களைத் தூவி நாம் தொழவேண்டும். அடியார்கள் எவ்வாறு சிவபிரானைத் தொழுவார்கள் என்றும் சொல்லும் ஞான சம்பந்தப் பெருமான் பூக்களைக் கொண்டு தொழுவார்கள் என்று அண்ணாமலைப் பதிகத்தில் கூறுகின்றார்.

பூவார் மலர் கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள்

மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்

தூமாமழை நின்று அதிர வெருவித் தொறுவின் நிரையோடும்

ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே

இவ்வாறு பூக்களைக் கொண்டு இறைவனின் மலரடிகளைத் தொழும்போது, அரும்புகளையும்(மொக்கு), வண்டுகள் மொய்த்த பூக்களையும் நீக்கவேண்டும் என்று அப்பர் பிரான் தில்லைத் திருப்பதிகத்தில் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றார்.

அரும்பு அற்றப்பட ஆய்மலர் கொண்டு நீர்

சுரும்பு அற்றப்பட தூவித் தொழுமினோ

கரும்பற்றச் சிலை காமனைக் காய்ந்தவன்

பெரும்பற்றப் புலியூர் எம் பிரானையே

இந்த செய்தியை மிகவும் சுருக்கமாக, சம்பந்தப் பெருமான் திருவோத்தூர் பதிகத்தில் கூறுகின்றார்

பூத் தேர்ந்து ஆயன கொண்டு நின் பொன்னடி

ஏத்தாதார் இல்லை எண்ணுங்கால்

ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கை

கூத்தீரும்ம குணங்களே

தனது அங்கமாலைப் பதிகத்தில் அப்பர் பெருமான் கைகள் செய்யவேண்டிய பணி மணம் நிறைந்த மலர்களை இறைவனின் மீது தூவி அவனைத் தொழுது வணங்குவது தான் என்று கூறுகின்றார்.

கைகாள் கூப்பித் தொழீர் கடி மாமலர் தூவி நின்று

பைவாய் பாம்பு அரை ஆர்த்த பரமரை

கைகாள் கூப்பித் தொழீர்

பொழிப்புரை

சிவபிரானின் பொன்னார் திருவடிகளை தங்களது கைகளால் பூக்கள் தூவி வழிபாடு செய்யாதவர்களும், தங்களது நாவினால் சிவபிரானது திருமாமத்தைச் சொல்லாதவர்களும், தங்களது வாழ்க்கையை தங்களது உடலினை வளர்ப்பதற்காக உணவினைத் தேடி அலைந்து வீணாகக் கழித்து இறுதியில் தங்களது உடலினை காக்கைக்கும் கழுகினுக்கும் உணவாக அளிப்பதைத் தவிர பயனான காரியம் ஏதும் செய்வதில்லை. ,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காலை சிற்றுண்டி திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும்: எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி.

கே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்
தினப்பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை