பாடல் 9
உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி உழிதரும் அவ்வூமர்
அவர் உணரா வண்ணம்
பரிந்தவன் காண் பனிவரை மீப்பண்டம் எல்லாம் பறித்து உடனே
நிரந்து வரு பாய் நீர்ப் பெண்ணை
நிரைந்து வரும் இருகரையும் தடவா ஓடி நின்மலனை வலம்
கொண்டு நீள நோக்கித்
திரிந்துலவு திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன் காண் அவன்
என் சிந்தையானே

விளக்கம்

உரிந்த = நீக்கிய. உரிந்த உடையார் = உடைகள் அணிவதை துறந்த சமணர்கள். உழி தரும் = திரியும். துவர் = துவராடை. ஊமர் = இறையுணர்வு இல்லாதவர்கள். பரிந்தவன் = பரிவுடன் அருள் செய்தவன். புத்தர்களும் சமணர்களும் இடைவிடாது கடவுள் இல்லை என்று பிரசாரம் செய்து வந்தாலும், அதனை பொருட்படுத்தாது தன்னை வணங்கி வழிபாட்டு வந்த அடியார்களுக்கு அருள்புரிந்த சிவபெருமான்; மீப்பண்டம் = மேல் இருந்த பொருட்கள்.

புத்தர்களும் சமணர்களும் இறைவனை இகழ்ந்து பேசியதை பொருட்படுத்தாமல் பெருமானை வணங்கிய அடியார்களுக்கு அருள்புரிந்த பெருமான் என்று குறிப்பிடுவது, நமக்கு ஞானசம்பந்தரின் ஆவடுதுறை பதிகத்தின் பாடலினை (3.4.10) நினைவூட்டுகின்றது புத்தர்களும் சமணர்களும், பெருமானை குறித்து திரித்துகூறிய சொற்களை பொருட் படுத்தாமல், பெருமானை தொடர்ந்து வணங்கிய அடியார்கள் என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும்
அத்தா உன் அடி அலால் அரற்றாது என் நாப்
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்கட்கு அருள் செய்து பயின்றவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

பொழிப்புரை

நாட்டின் பல இடங்களில் திரியும், உடையினை நீத்த சமணர்களும், துவர் ஆடையை உடையாகக்கொண்ட புத்தர்களும், சிவபெருமானின் இயல்புகளை முறையாக அறியாத வண்ணம் பலவாறு பிதற்றினாலும், அத்தகைய சொற்களை பொருட்படுத்தாது பெருமானை வழிபடும் அடியார்களுக்கு அருள்புரிபவனாக உள்ளவன் சிவபெருமான். குளிர்ந்த மலையின் உச்சியில் உள்ள முத்து, மணி, சந்தனம், அகில், மூங்கில் போன்ற விலையுர்ந்த பொருட்களை வாரிக்கொண்டு பாயும் பெண்ணையாற்றின் நீர், இரண்டு கரைகளையும் தடவிக்கொண்டு வெள்ளமாக பாய்ந்து வருகையில், வலம் வருகின்ற முண்டீச்சரம் தலத்தில் சிவலோக நாதனாக பெருமான் உறைகின்றான். அந்த இறைவன்தான் எனது சிந்தைனையில் நிறைந்து உள்ளான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

உ.பி. படகு விபத்து: பலி 12ஆனது, தொடரும் தேடும் பணி!
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை