பாடல் 2
தலை சுமந்து இரு கை நாற்றித் தரணிக்கே பொறையதாகி
நிலையிலா நெஞ்சம் தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும்
விலை கொடுத்து அறுக்க மாட்டேன் வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்
குலைகள் மாங்கனிகள் சிந்தும் கோவல் வீரட்டனீரே

விளக்கம்

பொறை = பாரம். எய்த்தல் = இளைத்தல். நாற்றி = தொங்கவிட்டுக்கொண்டு. முதல் பாடலில் இறையுணர்வு ஏதும் இன்றி, வாழும் வீணான வாழ்க்கையை குறிப்பிடும் அப்பர் பிரான், இந்த உடல் பூமிக்கு சுமையாக உள்ளது என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். நமக்கு இறைவன் அளித்த தலையினை, அவனை வணங்குவதற்கு பயன்படுத்த வேண்டும் என்றும், அவன் நமக்கு அளித்த கைகளை அவனை வணங்க பயன்படுத்த வேண்டும் என்று பாடிய அப்பர் பிரானின் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடலிலும் அப்பர் பிரான் மட நெஞ்சம் என்று அறியாமையில் ஆழ்ந்திருக்கும் மனதினை குறிப்பிடுவதை நாம் உணரலாம். அப்பர் பிரான் குறிப்பிட்டுள்ள அவலத் தன்மை நிறைந்த வாழ்க்கையினைத் தவிர்த்து, பாசங்களை அறுத்து, பொருளுடைய வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே இந்த பாடலின் கருத்தாகும்.

வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடும் காலமே

பொழிப்புரை

தலையினை சுமந்து, இரு கைகளையும் தொங்கவிட்டுக் கொண்டு, பூமிக்கு பாரமாக வாழ்ந்து வரும் நான், நிலையில்லாத நெஞ்சினை உடையவனாக இருக்கின்றேன். நாள்தோறும் ஐந்து பொறிகள் விரும்பும் செயல்களையே செய்துவரும் நான், அத்தகைய செயல்களைச் செய்வதிலேயே உடல் இளைக்கின்றேன். ஐந்து பொறிகள் வேண்டுவதில் ஒரு சிலவற்றை மட்டும் செய்து, அவைகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இயலாதவனாக நான் வாழ்கின்றேன். குலைகளாக மாங்கனிகள் பழுத்து விழும் கோவல் வீரட்டத்தில் உறையும் இறைவனே, நீர்தான் நான் வாழும் வாழ்க்கையை பயனுள்ளதாக மாற்ற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை