20. செத்தையேன் சிதம்பன் - பாடல் 3

சான்றோர்கள் குறிப்பிடும் நல்ல வழியில் சென்று, தினமும் உடலையும் உள்ளத்தையும் தூய்மை செய்து உலகப் பொருட்களின்

Updated On :7 ஏப்ரல் 2016, 10:44 am

பாடல் 3

வழித் தலைபடவும் மாட்டேன் வைகலும் தூய்மை செய்து
பழித்திலேன் பாசம் அற்றுப் பரம நான் பரவ மாட்டேன்
இழித்திலேன் பிறவி தன்னை என் நினைந்து இருக்க மாட்டேன்
கொழித்து வந்து அலைக்கும் தெண்ணீர்க் கோவல் வீரட்டனீரே

விளக்கம்

வழி = நல்வழி. தலைப்படுதல் = நிற்றல், செல்லுதல், கூடுதல். வைகல் = நாள்தோறும். ஐந்து பொறிகளின் ஆளுமையிலிருந்து நாம் விடுபட்டால் மட்டும் போதாது. நமது உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக்கொண்டு, உலகப் பொருட்கள் மீது நாம் வைத்துள்ள பாசத்தை அறவே களைந்தால்தான் இறையுணர்வில் நாட்டம் பெருகும் என்பதை உணர்த்தும் பாடல்.

பொழிப்புரை

சான்றோர்கள் குறிப்பிடும் நல்ல வழியில் சென்று, தினமும் உடலையும் உள்ளத்தையும் தூய்மை செய்து உலகப் பொருட்களின் இழிந்த நிலையை உணர்ந்து அவற்றின் மீது வைத்துள்ள பாசத்தை ஒழித்து, மேம்பட்ட பொருளாகிய உன்னை புகழாமல் இருக்கின்றேன். இந்த பிறவியை இழிவு என்று கருதி, பிறவியுடன் பொருந்திய உடலினை இழிந்த பொருள் என்று கருதி, பொருத்தமான பொருளாகிய உனது நினைவுடன் வாழாமல் இருக்கின்றேன். நதியின் இரு கரைகளிலும் பல பொருட்களை அடித்துக் கொண்டு வந்து சேர்க்கும் குளிர்ந்த நீரினை உடைய கோவல் வீரட்டத்தில் உறையும் இறைவனே, நீர்தான் எனது இழிவான தன்மையை மாற்றி, நல்வழிப்படுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.