பாடல் 6
மாச் செய்த குரம்பை தன்னை மண்ணிடை மயக்கம் எய்து
நாச் செய்த நாலும் ஐந்து நல்லன வாய்தல் வைத்துக்
காச் செய்த காயம் தன்னுள் அணித்தலும் ஐவர் வந்து
கோச் செய்து குமைக்க ஆற்றேன் கோவல் வீரட்டனீரே

விளக்கம்

மா = ஐம்பெரும் பூதங்கள். குரம்பை = உடலாகிய குடிசை. மண் = பொதுவாக உலகம் என்ற பொருளில் வரும் சொல். ஆனால் இங்கே உலகத்தில் உள்ள பொருட்களைக் குறிக்கின்றது. உடலில் உள்ள ஐந்து பொறிகளும், உயிரின் விருப்பபடி செயல்படாமல் தங்கள் விருப்பபடி செயல்பட்டாலும், ஐந்து பொறிகளின் சேவை உடலுக்கு மிகவும் அவசியம். உடலின் வளர்ச்சி, அதனுள்ளே குடி கொண்டிருக்கும் உயிருக்கு மிகவும் அவசியம். இந்த கருத்தினை மிகவும் அழகாக திருமந்திரத்தில் திருமூலர் கூறுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். உயிர், தான் தனியாக மெய் ஞானத்தை உணர முடியாது. அது ஒரு உடலைச் சார்ந்துதான் ஞானத்தை அறிய முடியும். அதனால்தான் உயிர், அதன் வினைத் தொகுதிகளுக்கு ஏற்ப ஒரு உடலுடன் இறைவனால் இணைக்கப்படுகின்றது. இந்த தத்துவம் இங்கே மறைமுகமாக அப்பர் பெருமானால் உணரத்தப்படுகின்றது.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம் பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

பொழிப்புரை

ஐம்பெரும் பூதங்களால் ஆக்கப்பட்ட குடிசையாகிய இந்த உடல், உலகப் பொருட்களின் மீது விருப்பம் வைத்துள்ளது. இந்த உடலினை வளர்ப்பதற்கு நாக்குத் தனக்கு சுவை தரும் உணவுகளை உண்கின்றது, உடலிலுள்ள ஒன்பது வாசல்களாகிய துவாரங்கள் (இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு நாசித் துவாரங்கள், வாய், எருவாய் மற்றும் கருவாய்), தங்களை வளர்க்கும் உணவினை உட்கொள்ளும் நாவினுக்கு ஆட்பட்டு வாழ்கின்றன. மேற்கூறிய பொறிகள் அனைத்தும் சேர்ந்த உடல், இந்த உயிரைச் சுமக்கின்றது. அதனால் உயிர் தன்னைச் சுமக்கும் உடலினை பொறுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. இவ்வாறு உடலை விட்டு வெளியே வரமுடியாத உயிர், உடலுக்குள் புகுந்து உடலினை தங்கள் வசப்படுத்தி, ஆட்சி செய்யும் ஐந்து பொறிகள் செய்யும் தாங்கவொண்ணாத தீங்குகளையும் எதிர்கொள்ள நேர்கின்றது. ஆனால் அளவுக்கு மீறி, இந்த ஐந்து பொறிகள் செய்யும் தீங்குகளை என்னால் பொறுக்க இயலவில்லை. கோவல் வீரட்டத்தில் உறையும் இறைவனே, நீர் தான் எனது உயிரும் உடலும் ஐந்து பொறிகளின் ஆட்சியால் படும் வேதனைகளைத் தீர்க்க வழி வகுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை