பாடல் 8
பிச்சிலேன் பிறவி தன்னைப் பேதையேன் பிணக்கம் என்னும்
துச்சுளே அழுந்தி வீழ்ந்து துயரமே இடும்பை தன்னுள்
அச்சனாய் ஆதி மூர்த்திக்கு அன்பனாய் வாழ மாட்டாக்
கொச்சையேன் செய்வது என்னே கோவல் வீரட்டனீரே

விளக்கம்

அச்சன் = தலைவன், மேம்பட்டவன். பிணக்கம் = மாறுபாடு, சிவநெறியிலிருந்து மாறுபட்ட நிலை. துச்சு = இழிந்த நிலை. பிச்சிலேன் = பிய்த்திலேன் என்ற சொல்லின் திரிபு. தன்னுடன் பிணைக்கப்பட்டிருக்கும் பிறப்பிறப்பு என்ற சங்கிலியை, பிய்த்து, அறுத்தெறியத் தெரியாத நிலை இங்கே குறிப்பிடப்படுகின்றது. கொச்சையேன் என்ற சொல்லுக்கு இருவிதமாக பொருள் கூறப்படுகின்றது, இழிந்த நிலையில் உள்ளவன் என்பது ஒரு பொருள். கொத்தையேன் என்ற சொல்லின் திரிபாக குருடன் என்பது மற்றொரு பொருள். அகக் கண் குருடாக இருக்கும் நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது.

கொத்தை ஆக்கினாய் என்று சுந்தர மூர்த்தியார், திருவாரூர் பதிகத்தில் (7.95.2) கூறுவது இங்கே நினைவுகூரத்தக்கது. எந்த குற்றமும் செய்யாத தனது கண்ணை எதற்காக ஒளியிழக்கச் செய்து குருடனாக தன்னை மாற்றினீர் என்று இறைவனை நோக்கி சுந்தரர் கேட்கும் பாடல் இது. மற்றைக் கண் என்று கூறுவதன் மூலம், இடது கண்ணின் ஒலியினை இறைவன் அருளால் காஞ்சி நகரத்தில் பெற்றதும் இங்கே உணர்த்தப்படுகின்றது. ஒற்றி என்றால் அடமானம் வைக்கப் பட்டபொருள். அடமானம் வைக்கப்பட்ட பொருளின் மீது, பொருளின் உரிமையாளர் தவிர வேறு எவரும் சொந்தம் கொண்டாட முடியாது. முழு விருப்பத்துடன் தான் சிவபிரானுக்கு அடிமையாக இருப்பதால், தன்னை எவ்வாறு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ள பெருமானுக்கு உரிமை உண்டு என்று இங்கே கூறுகின்றார். மேலும் திருமணப் பந்தலில் அடிமை என்று உரிமை கொண்டாடியபோதும், திருவெண்ணெய் நல்லூரில் அவையோரின் முன்னர் அடிமை ஓலை காட்டிய போதும், அந்தணர்கள் அடிமையாவது வழக்கம் இல்லை என்று வாதாடிய சுந்தரர், வெண்ணெய்நல்லூர் அருட்துறைக் கோயிலில் அசரீரி மூலம் உண்மையை உணர்ந்த பின்னர், தனது அடிமைத் தன்மையை மிகவும் விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டார். அந்த செய்திதான் இங்கே விரும்பி ஆட்பட்டேன் என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றது.

விற்றுக் கொள்வீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை கொத்தை ஆக்கினீர்
எற்றுக்கு அடிகேள் என் கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண் தான் தாராது ஒழிந்தால் வாழ்ந்து போதீரே

பொழிப்புரை

சிவபெருமானைப் பற்றிய அறிவு இல்லாத காரணத்தால், என்னைப் பிணித்திருக்கும் பிறப்பிறப்புச் சங்கிலியை பிய்த்தெறியத் தெரியாத அறிவிலியாக நான் உள்ளேன். சிவநெறியுடன் மாறுபாடு கொண்டுள்ள இழிந்த நிலையில், உடலின் மீது பற்றுவைத்து வாழும் நிலையில், ஆழ்ந்து கிடக்கும் நான், துன்பங்களையே எப்போதும் நுகர்ந்து கொண்டிருக்கும் உடலின் உள்ளே இருக்கும் உன்னை உணராது இருக்கின்றேன். அனைத்து உயிர்களுக்கும் மேம்பட்டவனாகவும், ஆதி மூர்த்தியாகவும் திகழும் பெருமானுக்கு அன்பனாக வாழும் வாழ்க்கையை மேற்கொள்ளாமல் இருக்கின்றேன். இவ்வாறு அகக்கண் குருடனாக வாழும் நான் என்ன செய்வதென்று அறியாமல் திகைக்கின்றேன். கோவல் வீரட்டம் நகரத்தில் உறையும் இறைவனே, நீர்தான் எனபது அகக்கண் குருட்டினைப் போக்கி, உனக்கு அன்பனாக வாழும் நிலைக்கு மாற்ற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை