பாடல் 10
விரிகடல் இலங்கைக் கோனை விரி கயிலாயத்தின் கீழ்
இருபது தோளும் பத்துச் சிரங்களும் நெரிய ஊன்றிப்
பரவிய பாடல் கேட்டுப் படை கொடுத்து அருளிச் செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல் வீரட்டனீரே

விளக்கம்

இந்து மகா சமுத்திரம் என்ற பெயரில் உள்ள மகா சமுத்திரம் என்ற சொற்கள் விரிகடல் என்று மிகவும் அழகாக, பொருள் கெடாமல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள நயம் நாம் ரசிக்கத்தக்கது. பரவிய = வாழ்த்திப் பாடிய.

பொழிப்புரை

அகன்று விரிந்து பரந்த கடலால் சூழப்பட்ட இலங்கைத் தீவுக்கு அரசனாகிய இராவணன், கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்தபோது, அவனது இருபது தோள்களும் பத்து தலைகளும் கயிலாய மலையின் கீழே நசுங்குமாறு, தனது கால் பெருவிரலை மலையின் மீது ஊன்றியவர் சிவபெருமான். தனது வலிமை ஒடுக்கப்பட்ட நிலையில், அரக்கன் இராவணன் சிவபெருமானை புகழ்ந்து சாமகானம் பாட, அந்த பாடலைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், அரக்கனுக்கு சந்திரகாசம் என்ற வாளினைக் கொடுத்து அருளினார். இவ்வாறு அரக்கன் இராவணனுக்கு அருள்செய்த சிவபெருமான், குரவ மரமும் கோங்கு மரமும் சூழ்ந்த திருக்கோவலூர் வீரட்டம் திருக்கோயிலில் உறைகின்றார்.

முடிவுரை

வாழ்வில் பற்றுக்கோடு ஏதும் இல்லாமல் வாழும் மனிதனின் உணர்வுகளை, பதிகத்தின் முதல் பாடல் பிரதிபலிப்பதாக உள்ளது. மெய்ப்பொருளாகிய சிவபெருமான்தான் நாம் வாழ்வினில் உய்வதற்கு பற்றிக்கொள்ள வேண்டிய பற்றுக்கோடு என்பதை இந்த பாடலில் உணர்த்தும் அப்பர் பிரான், மெய்ப்பொருளை உணர முடியாமல் எவ்வாறு ஐந்து பொறிகளும் தடுக்கின்றன என்பதை அடுத்த பாடலில் விளக்குகின்றார். மூன்றாவது பாடலில், ஐந்து பொறிகளை கட்டுப்படுத்துவதுடன், நமது உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டு, உலகப் பொருட்கள் மீது வைத்துள்ள பாசத்தையும் அறவே அறுக்க வேண்டும் என்று கூறுகின்றார். நான்காவது, ஆறாவது பாடல்களில், ஐந்து பொறிகளின் செய்கைகளால் உயிர் படும் துன்பங்களை கூறுகின்றார். ஐந்தாவது பாடலில் அகமலர்கள் எனப்படும் எட்டு உயர்ந்த பண்புகளை வளர்த்துக்கொண்டு, இறைவனிடம் அன்பு செய்ய வேண்டும் என்று கூறுகின்றார். ஆறாவது பாடலில், உயிர் எதனால், ஐந்து பொறிகளின் செய்கைகளை பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்பதையும் கூறுகின்றார். ஏழாவது பாடலில், வினைகளால் விளையும் இடையூறுகளை விளக்குகின்றார். எட்டாவது பாடலில், அறியாமையில் ஆழ்ந்து கிடக்கும் தன்னை, பிறவியின் உண்மைத்தன்மையை உணரவைத்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவிக்குமாறு வேண்டுகின்றார். ஒன்பதாவது பாடலில், மனைவி, மக்கள் மற்றுமுள்ள சுற்றம் எவ்வாறு மெய்பொருளை உணர்வதில் நமக்குத் தடையாக உள்ளன என்று கூறுகின்றார். பத்தாவது பாடலில் அரக்கன் இராவணன், இறைவனைப் புகழ்ந்து பாடி, தனது துன்பங்களைத் தீர்த்துக்கொண்டதை குறிப்பிட்டு, இறைவனுக்கு உகந்த பாடல்களை பாடி நாம் உய்யும் வழியினைத் தேட வேண்டும் என்பதை உணர்த்துகின்றார். மொத்தத்தில் இந்த பதிகம் மூலம், உலக வாழ்க்கையின் அவலங்களை விரிவாக எடுத்துக்கூறும் அப்பர் பிரான், பாடலின் இறுதியில் நாம் உய்யும் வழியினை காட்டுகின்றார். அப்பர் பிரானின் அறிவுரையை பின்பற்றி, நாம் நால்வர் பெருமானார்கள் அருளிய பாடல்களை பாடி, இறைவனை மகிழ்வித்து, அவனது அருள் பெற்று உய்வோமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை