பாடல் 3 (10)
கடவும் திகிரி கடவாது ஒழியக் கயிலை உற்றான்
படவும் திருவிரல் ஒன்று வைத்தாய் பனி மால் வரை போல்
இடவம் பொறித்து என்னை ஏன்று கொள்ளாய் இரும் சோலை திங்கள்
தடவும் கடந்தையுள் தூங்கானை மாடத்து எம் தத்துவனே

விளக்கம்

கடவும் = செலுத்தப்பட்ட. திகிரி = தேர். கடவாது ஒழிய = மேலே செல்லமுடியாமல் நிற்க (கயிலை மலை எதிரே இருந்ததால்). உற்றான் = எடுக்கலுற்றான். படவும் = வருத்தப்படவும். ஏன்று கொள்ளுதல் = ஏற்றுக்கொள்ளுதல். பனிமால்வரை = இமயமலை, இமாசலம் என்பதன் தமிழாக்கம்.

பொழிப்புரை

சந்திரன் பொருந்தி உலவுமளவு உயர்ந்த பெரிய சோலைகள் நிறைந்த கடந்தைத் தலத்தில் உள்ள தூங்கானைமாடத்தில் உறையும் மெய்ப்பொருளே, வானில் சென்ற தேர் மேலும் செல்லமுடியாமல் நின்றதால், தனக்கு எதிரே இருந்த திருக்கயிலாய மலையினை பேர்த்தேடுக்க முயற்சி செய்த இராவணன் வருத்தப்படுமாறு ஒரு விரலினை மலையின் மீது வைத்து, அரக்கனின் ஆற்றலை அடக்கிய சிவபெருமானே, உயர்ந்த இமயமலை போன்று வெண்ணிறம் உடைய நந்தியின் உருவத்தினை எனது உடலின் மீது பொறித்து, என்னை உனது தொண்டனாக ஏற்றுக் கொள்வாயாக.

முடிவுரை

இந்தப் பதிகத்தில் கொடுக்கப்பட்டுள்ள மூன்று பாடல்கள் தவிர எஞ்சிய பாடல்கள் சிதைந்துபோயின.

இந்தப் பதிகம் பாடி முடிக்கப்பட்டவுடன், ஒரு சிவபூதம் வேறு எவரும் அறியாமல், அப்பர் பிரானின் திருத்தோள்களில் மூவிலைச் சூலக் குறியினையும் இடபத்தின் குறியினையும் சாத்தியது. இந்த நிகழ்ச்சியை குறிப்பிடும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

நீடு திருத்தூங்கானை மாடத்து நிலவுகின்ற
ஆடக மேருச் சிலையான் அருளால் ஓர் சிவபூதம்
மாடொருவர் அறியாமே வாகீசர் திருத்தோளில்
சேடுயர் மூவிலைச் சூலம் சினவிடையினுடன் சாத்த

தனது தோளில் பொறிக்கப்பட்ட சின்னங்களைக் கண்டு மிகவும் மனம் மகிழ்ந்தவராய், அப்பர் பிரான், சிவபிரானின் திருவருளை நினைந்து, தனது கண்களில் நீர் அருவிபோல் பொழிய, நிலத்தில் வீழ்ந்து இறைவனை வணங்கி, நான் உய்ந்தேன் என்று சொல்லிக்கொண்டே எழுந்ததாக சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை