33. அரியானை அந்தணர் - பாடல் 5

நமக்கு ஒப்பற்றத் துணைவனாய் விளங்கும் சிவபெருமான், அடியார்களின் அல்லலாகிய பிறவிப்பிணியைத் தீர்க்கும் மருந்தாக செயல்படுபவன்.

Updated On :5 ஆகஸ்ட் 2016, 10:37 am

பாடல் 5

அருந்துணையை அடியார் தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை அகல்
ஞாலத்து அகத்துள் தோன்றி
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு வான்புலன்கள் அகத்து
அடக்கி மடவாரோடும்
பொருந்தணை மேல் வரும் பயனைப் போகமாற்றிப் பொது நீக்கித்
தனை நினைய வல்லோர்க்கு என்றும்
பெருந்துணையை பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத
நாளெல்லாம் பிறவா நாளே

விளக்கம்

அருந்துணை = ஒப்பற்ற துணை. வான்புலன்கள் = வானத்தைப் போன்று பெரிய புலன்கள். உண்மையான மெய்ப்பொருளை நாம் நினைக்காத வண்ணம், நம்மைத் திசைதிருப்பும் வல்லமை வாய்ந்த ஐம்புலன்களை, இகழ்ச்சி தோன்ற வான்புலன்கள் என்று குறிப்பிடுகின்றார்.

சிவபிரான் துணையாக இருந்ததால் அமணர்களின் வஞ்சனையில் இருந்து தப்பித்த அப்பர் பிரான் தனக்கு ஒப்பற்ற பெருந்துணையாக இருந்த சிவபிரான், யாருக்கெல்லாம் பெருந்துணையாக இருப்பான் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். உடன்பிறந்தார், சுற்றத்தார், செல்வம் இவைகளின் மீது வைத்த பாசத்தை நீத்து, புலன்களின் மேல் செல்லும் மனத்தை அடக்கி மகளிர் தரும் சிற்றின்பப் பயனை அடியோடு ஒழித்து பொதுவாக பல தெய்வங்களை நினைப்பதை விடுத்து சிவபிரான் ஒருவனையே போற்றும் வல்லவர்களுக்கு பெருந்துணையாக சிவபிரான் இருப்பார் என்று இந்த பாடலில் கூறுகிறார். பற்றுகளை அறுத்தவரே, இயல்பாகவே பற்றற்ற பரமனைச் சேரலாம் என்ற கருத்து இந்தப் பாடலில் கூறப்படுகின்றது. பற்று அறுவதற்காகத் தானே நமக்கு பல பிறப்பை இறைவன் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். மாயையாகிய உலகப் பொருட்களின் மேல் நாம் வைத்துள்ள பாசத்தை நீக்கி, மெய்ப்பொருளை தியானித்து நமது வினைகளைக் கழிக்க முயற்சி செய்ய வேண்டும் என்ற அறிவுரை இங்கே வழங்கப்படுகின்றது.

பொது நீக்கி என்று பொதுவான தேவர்களோடு இணைக்காமல், சிவபிரானின் தனித் தன்மைகளை புரிந்துகொண்டு அவரை நினைக்க வேண்டும் என்று இங்கே சொல்லப்படும் கருத்து திருவாசகம் அச்சப்பத்து பதிகத்தின் இரண்டாவது பாடலை நினைவூட்டும். இந்தப் பாடலில் மணிவாசகர், சிவபிரான் அல்லாத மற்றைய தேவர்களைத் தேவர்கள் அல்ல என்று கருதி, அவர்களை வெறுக்காதவரைக் கண்டால் நாம் பயம் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார்.

வெருவரேன் வேட்கை வந்தால் வினைக் கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரானாம்
திருவுரு அன்றி மற்று ஓர் தேவர் எத்தேவர் என்ன
அருவராதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

பொழிப்புரை

நமக்கு ஒப்பற்றத் துணைவனாய் விளங்கும் சிவபெருமான், அடியார்களின் அல்லலாகிய பிறவிப்பிணியைத் தீர்க்கும் மருந்தாக செயல்படுபவன். இந்த உலகத்தில், தான் பிறப்பெடுத்த பின்னர் தோன்றிய உடன்பிறப்புக்களை, மற்ற சுற்றத்தார், மற்றும் செல்வம் முதலான உலகப் பொருட்கள் இவற்றின் மீது வைத்த பற்றுக்களை விட்டு, நல்ல வழியில் செல்லவிடாமல் திசை திருப்பும் வல்லமை பெற்ற ஐம்புலன்களை அடக்கி, மகளிரோடு கூடி அனுபவிக்கும் சிற்றின்பத்தை அறவே வெறுத்து, மற்ற தெய்வங்களுடன் சமமாக நினைக்காமல், சிவபெருமானின் தனிப் பெரும் சிறப்புக்களை புரிந்து கொண்டு அவனை வழிபடும் அடியார்களுக்கு பெரிய துணையாக இருப்பவன் சிவபெருமான். இவ்வாறு அனைவருக்கும் துணையாக இருக்கும், பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாட்களை நாம் பிறவாத நாட்களாக கருத வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.