33. அரியானை அந்தணர் - பாடல் 6

கரும்பு போன்ற இனிய சொற்களை உடைய பார்வதியைத் தனது திருமேனியின் இடது பாகத்தில் கொண்டவன் சிவபெருமான்; தனது சிவந்த மேனியில்

Updated On :5 ஆகஸ்ட் 2016, 10:38 am

பாடல் 6

கரும்பமரும் மொழி மடவாள் பங்கன் தன்னைக் கனவயிரக் குன்று
அனைய காட்சியானை
அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னை அருமறையோடு
ஆறங்கம் ஆயினானைச்
சுரும்பு அமரும் கடிபொழில்கள் சூழ் தென்னாரூர்ச் சுடர்க்
கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க
பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத
நாளெல்லாம் பிறவா நாளே

விளக்கம்

சுரும்பு = வண்டு. துளக்கு = அசைவு. காற்றில் அசைவதால் விளக்குகள் அணைந்துபோவதுண்டு. வேதங்களின் ஆறு அங்கங்களாக கருதப்படுவன: சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிடம், கல்பம் என்பன. வேதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுவது சிக்ஷை எனப்படும் பகுதி. எழுத்துக்கள் ஒலிக்கப்பட வேண்டிய முறை, மாத்திரை அளவுகள், மற்றும் அந்தந்த எழுத்துக்களுக்கு உரிய தேவதைகள் முதலிய பல விவரங்கள் அடங்கிய பகுதிகள் சிக்ஷை என்று அழைக்கப்படும். பல எழுத்துகளால் உருவான சொற்களைப் பற்றி கூறுவது வியாகரணம். சந்தஸ் என்பது வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மந்திரங்களின் எழுத்து எண்ணிக்கையை குறிக்கும் பகுதியாகும். நிருக்தம் என்றால் விளக்கிச் சொல்லுதல் என்று பொருள். வேதங்களில் வரும் சொற்றொடர்களுக்கும், சொற்களுக்கும் விளக்கம் அளிக்கும் வேதத்தின் பகுதிகள் நிருக்தம் என்று அழைக்கப்படுகின்றன.

ஜோதிடம் என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியான கணிதத்தில், கால தத்துவங்கள், வருடம், அயனம், திதி, வாரம், மாதம், வளர்பிறை/தேய்பிறை விவரங்கள் மற்றும் அந்தந்த காலங்களில் செய்யக்கூடிய காரியங்கள் விளக்கப்பட்டுள்ளன. இரண்டாவது பகுதியான ஹோரையில், இதுவரை நடந்த சம்பவங்கள், தற்போது நடக்கும் சம்பவங்கள், இனி நடக்க இருக்கும் சம்பவங்கள் என்பவை கோள்களின் பயணத்தின் அடிப்படையில் கணித்துச் சொல்லப்படுகின்றன. கல்பம் என்றால் பிரயோகம் என்று பொருள். வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கர்மாக்களை செய்ய வேண்டிய வழிமுறைகள் அடங்கிய பகுதிகள் கல்பம் என்று அழைக்கப்படுகின்றன.

பொழிப்புரை

கரும்பு போன்ற இனிய சொற்களை உடைய பார்வதியைத் தனது திருமேனியின் இடது பாகத்தில் கொண்டவன் சிவபெருமான்; தனது சிவந்த மேனியில் வெண்ணீறு பூசிய காரணத்தால், வெண்மை நிறத்தில் வைரக் குன்று போன்று காட்சி அளிப்பவனும், மலரும் தருவாயில் உள்ள கொன்றை மலர்களை மாலையாக அணிந்தவனும், அருமறையோடு ஆறங்கமாகத் திகழ்பவனும் அவனே. அத்தகைய சிவபிரானை, வண்டுகள் நிறைந்த நறுமணம் வீசும் சோலைகள் மிகுந்த திருவாரூரில் உறையும் சுடர்க்கொழுந்தை, அசைவதும் அணைந்துபோவதும் அற்ற விளக்கினை, அனைத்துப் பொருட்களினும் அதிகமான இன்பத்தைத் தரும் வீடுபேறாக இருப்பவனை, பெரும்பற்றப் புலியூர் என்று அழைக்கப்படும் தலத்தில் உறைபவனும் ஆகிய சிவபிரானைப் பேசாத நாட்கள் வீணாகக் கழிந்த நாட்கள் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.