பாடல் 10
மாலினாள் நங்கை அஞ்ச மதில் இலங்கைக்கு மன்னன்
வேலினான் வெகுண்டு எடுக்கக் காண்டலும் வேத நாவன்
நூலினான் நோக்கி நக்கு நொடிப்பதோர் அளவில் வீழக்
காலினால் ஊன்றி இட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே

விளக்கம்

மாலினாள் = பெருமானிடம் அதிகமான விருப்பம் உடையவள். வேலினான் = வேல் ஏந்திய வீரன். நூலினான் = வேத நூல்களை அருளிய பெருமான்.

பொழிப்புரை

மதில்களை உடைய இலங்கைக்கு அரசனும், வேல் ஏந்திய வீரனும் ஆகிய அரக்கன் இராவணன் தனது வழியில் குறுக்கிட்டது என்று கருதி கயிலாய மலையினை மிகுந்த கோபத்துடன் பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது, கயிலை மலையில் ஏற்பட்ட அசைவினால், பெருமானிடம் மிகுந்த விருப்பம் கொண்டவளாகிய உமை நங்கை அச்சம் கொண்டாள். இந்த நிலையைக் கண்ட, வேத நூல்களை அருளியவனாகிய சிவபெருமான், சிரித்தவாறே, ஒரு நொடிப் பொழுதில் அரக்கன் இராவணன் ஆற்றலிழந்து கீழே விழுமாறு கயிலாய மலையினைத் தனது கால் விரலினால் அழுத்தினார். இத்தகைய வல்லமை வாய்ந்த பெருமான் கழிப்பாலைத் தலத்தில் கடற்கரைச் தலைவராக விளங்குகின்றார்.

முடிவுரை

பெருமான் என்னென்னவெல்லாம் வைத்து எப்படியெல்லாம் நமக்கு அருள்புரிந்தார் என்பதை மேற்கண்ட பதிகம் மூலம் அறிந்த நாம், இவ்வாறு அருள் புரிந்த பெருமானிடம் மிகுந்த அன்பும் பக்தியும் வைத்து அவரை வழிபாட்டு, வாழ்வினில் முக்தி அடைவோமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என் வாழ்வில் மறக்க முடியாத இடத்தில் இருப்பவர் ஆஷா போஸ்லே: இளையராஜா

ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு