பாடல் 6
விண்ணப்ப விச்சாதர்கள் ஏத்த விரிகதிரோன் எரிசுடரான் விண்ணுமாகி
பண்ணப்பன் பத்தர் மனத்துளேயும் பசுபதி பாசுபதன் தேச மூர்த்தி
கண்ணப்பன் கண்ணப்பக் கண்டு உகந்தார் கழிப்பாலை மேய கபாலப்பனார்
வண்ணப் பிணி மாய யாக்கை நீங்க வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே

விளக்கம்

விண்ணப்பம் = வேண்டுகோள். விச்சாதரர்கள் = வித்தியாதரர்கள். பண்ணப்பன் = உண்டுபண்ணும் அப்பன். வண்ணம் = பல வண்ணங்கள், பல வகைகள்.

பொழிப்புரை

வித்தியாதரர்கள் தங்களது வேண்டுகோளை சமர்ப்பித்து பெருமானை துதிக்கின்றார்கள். இவ்வாறு துதிக்கப்படும் சிவபெருமான், சூரியன், அக்னி, ஆகாயம், முதலிய பல பொருட்களைத் தோற்றுவித்தவன் ஆவான். அடியார்களின் மனதினில் பொருந்தி இருக்கும் அவன், அனைத்து உயிர்களுக்கும் தலைவனாகவும், அர்ஜுனனுக்கு பாசுபத ஆயுதம் அளித்து கருணை புரிந்தவனாகவும், தேசங்கள் அனைத்துக்கும் மூர்த்தியாகவும் விளங்குகின்றான். அவன், தன் மீது கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடாக அடியவன் கண்ணப்பன் தனது கண்ணினை நோண்டி, தனது இலிங்க உருவத்தின் மீது அப்பியதைக் கண்டு மிகவும் மகிழ்ந்தவன்; கபாலம் ஏந்திய கையனாகவும் விளங்கும் அவன், கழிப்பாலை தலத்தில் உறைகின்றான். ஒவ்வொரு பிறவிக்கும் விதம் விதமாக பல வகையான உடல்களுடன் இணைந்து வாழும் ஆன்மா, அவ்வாறு உடல்களுடன் இணையும் தன்மையை விடுத்து முக்தி நிலையினை அடைவதற்கு வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை! - நயினாா் நாகேந்திரன் பிரசாரம்
தினப்பலன்கள் - தனுசு
தினப்பலன்கள் - மிதுனம்
தினப்பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை