பாடல் 2
தீர்த்தனைச் சிவனைச் சிவலோகனை
மூர்த்தியை முதலாய ஒருவனைப்
பார்த்தனுக்கு அருள் செய்த சிற்றம்பலக்
கூத்தனைக் கொடியேன் மறந்து உய்வனோ

விளக்கம்

தீர்த்தன் = தூய்மை உடையவன். மூர்த்தி = தலைவன். அன்னியூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.96.8) ஞானசம்பந்தர், சிவபெருமான் தூயவன் என்பதை உணர்த்த தீர்த்தன் என்று கூறுகின்றார். ஆத்தம் = நெருங்கிய அன்பு. ஆப்தம் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். தூர்த்தன் = காமுகன், இங்கே அரக்கன் இராவணனைக் குறிக்கின்றது.

தூர்த்தனைச் செற்ற தீர்த்தன் அன்னியூர்
ஆத்தமா அடைந்து ஏத்தி வாழ்மினே

பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய பாடலில் (5.32.2) அப்பர் பிரான் சிவபெருமானை புனிதன், தூய்மையானவன் என்ற பொருள்பட தீர்த்தன் என்று அழைக்கின்றார். பார்த்தனோடு போர் புரிந்தது என்பது ஈசனின் திருவிளையாடல்களில் ஒன்றாகும். போர்புரியும் எண்ணத்துடன் சிவபெருமான் பார்த்தனை சந்திக்கவில்லை என்பதை படை தொட்டவன் என்ற தொடர் மூலம் அப்பர் பிரான் நமக்கு உணர்த்துகின்றார்.

ஆர்த்த தோலுடை கட்டி ஓர் வேடனாய்ப்
பார்த்தனோடு படை தொடுமாகிலும்
பூத்த நீள் பொழில் பூந்துருத்தி நகர்த்
தீர்த்தன் சேவடிக் கீழ் நாம் இருப்பதே
சுந்தரர், சிவபெருமானை தீர்த்தன் என்று அழைப்பதை நாம் கீழ்க்கண்ட பாடலில் (7.70.1) காணலாம். அங்கணன் = அழகிய நெற்றிக் கண்ணை உடையவன், கருணையாளன்.

கங்கை வார் சடையாய் கணநாதா காலகாலனே காமனுக்கு அனலே
பொங்கு மாகடல் விடம் மிடற்றானே பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால் விடையாய் தெளிதேனே தீர்த்தனே திருவாவடு துறையுள்
அங்கணா எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

மணிவாசகர் தனது திருவெம்பாவைப் பதிகத்தின் பன்னிரண்டாவது பாடலில், தீர்த்தன் என்று அழைத்து சிவபெருமானின் புனிதத் தன்மையை உணர்த்துகின்றார். நம்மை பீடித்துள்ள பிறவிப்பிணி நீங்கவேண்டும் என்றால், நம்மைச் சார்ந்துள்ள மலங்கள் விலக வேண்டும். நமது மலங்களை, மலங்கள் ஏதும் அற்ற ஒருவன்தானே விலக்கமுடியும். யார், மலங்களின் பிடியிலிருந்து விடுபட்டு, நமது மலங்களை அகற்றும் வல்லமை கொண்டுள்ளவர் என்பதை உணர்த்தும்முகமாக இங்கே, சங்கரனை தீர்த்தன் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். நமது உடலிலுள்ள மாசுகளை அகற்ற நாம் நீராடுகின்றோம். மனதிலுள்ள மாசுகளைக் களைந்தால்தானே, நமது உள்ளம் தூய்மையாக இருந்து இறையுணர்வினை அங்கே புகுத்திட ஏற்றதாக மாறும். அதற்காக நாம் நீராட வேண்டியது இறைவனாகிய தீர்த்தம் என்பதை உணர்த்தும் வகையில் நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் என்று இங்கே கூறுகின்றார். நீர்நிலையில் நீராடினால் நமது உடல் மாசுகள் அகற்றப்பட்டு உடல் தூய்மையாவது போன்று, இறைவன் எனும் தீர்த்தத்தில் நீராடினால், நமது மலங்கள் அகன்று, மலங்களால் நமக்கு ஏற்படும் பிறவிப் பிணியும் அகன்றுவிடும் என்று மணிவாசகர் இங்கே உணர்த்துகின்றார். தீயாடும் தீர்த்தன் என்று ஒன்றுக்கொன்று முரணான, ஒன்றை ஒன்று அழிக்கக்கூடிய, (தீ மற்றும் தண்ணீர்) இரண்டு பொருட்களையும் அவைகளின் இயல்பினை மாற்றி தானிடம் வைத்திருப்பவன் சிவபெருமான் என்றும் இங்கே சொல்லப்படுகின்றது. நீராடும்போது பேச வேண்டிய வார்த்தைகள், இந்த உலகத்தையும் நம்மையும், படைத்தும், காத்தும் விளையாடும் இறைவனைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்றும் இங்கே கூறுகின்றார்.

ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லாமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல் மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்

இந்த பாடலில் அப்பர் பிரான் தன்னை கொடியேன் என்று கூறிக்கொள்கின்றார். வினைத் தொகுதிகளின் தன்மைக்கு ஏற்ப ஒவ்வொரு உயிரும் பிறவி எடுக்க நேரிடுகின்றது. அத்தகைய பிறவிகளில், மனிதப் பிறவியில் தான், இறைவனை உணர்ந்து, அவனை வழிபாட்டு உய்வதற்கான வாய்ப்பு, அவ்வாறு அறிவதற்கு உதவும் கருவி கரணங்கள் கொடுக்கப்பட்டு, அளிக்கப்படுகின்றது. அத்தகைய வாய்ப்பினை பயன்படுத்தி, இறைவனை நினையாத மனிதர்களை கொடியவர்கள் என்று உணர்த்தும் விதமாக, இறைவனை நினைக்காத தன்னை கொடியேன் என்று சுட்டிக் காட்டி இங்கே குறிப்பிடுகின்றார். தன்னிடம் இல்லாத குறையாயினும், அந்த குறை தன்னிடம் உள்ளது போன்று தன்னைச் சுட்டிக் காட்டி, அடுத்தவரின் குறைகளை உணர்த்துவது அப்பர் பிரானின் பாணி.

பொழிப்புரை

தூயவனாக இருப்பவனும், சிவலோகத்தின் நாயகனும், அவனது அன்பான குணத்தை உணர்த்தும் வகையில் சிவன் என்று மங்கலமாக அழைக்கப்படுபவனும், தலைவனும், அனைத்துப் பொருட்களும் மற்றும் அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு காரணமாக இருப்பவனும், பார்த்தனுக்கு பாசுபதம் அளித்து அருள் செய்தவனும், சிற்றம்பலத்தில் நடமாடுபவனும் ஆகிய சிவபெருமானை மறந்தால் கொடியவனாகிய நான் வாழ்வில் உய்வினை அடையமாட்டேன். எனவே, எப்பொழுதும் அவரை நினைத்தவாறே இருப்பேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை! - நயினாா் நாகேந்திரன் பிரசாரம்
தினப்பலன்கள் - தனுசு
தினப்பலன்கள் - மிதுனம்
தினப்பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை