பாடல் 6
நீதியை நிறைவை மறை நான்குடன்
ஓதியை ஒருவர்க்கும் அறிவொணாச்
சோதியைச் சுடர் செம்பொனின் அம்பலத்து
ஆதியை அடியேன் மறந்து உய்வனோ

விளக்கம்

நிறைவை என்பதற்கு இரண்டுவிதமாக பொருள் கொள்ளலாம். குறை ஏதும் இல்லாதவன் என்றும், எங்கும் நிறைந்திருப்பவன் என்றுள்ள இரண்டு பொருள்களும் இங்கே பொருந்துகின்றன. குறைவு ஏதும் இல்லாத நிறைவாகத் திகழ்பவன் சிவபெருமான் என்று மணிவாசகர் கோயில் திருப்பதிகத்தில் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. சிறைபெறா நீர் = கட்டுப்படுத்தாத வெள்ளநீர். இறைவனே உடலில் இடம்பெற்ற பின்னர், அதனை விட பெரிய பேறு ஏதும் இல்லை என்பதால், மணிவாசகர், இறைவனை நோக்கி இனிமேல் உன்னை வேண்டிப் பெறக்கூடிய பொருள் ஏதும் இல்லை என்று இறுதி அடியில் கூறுகின்றார். இந்த கருத்தையே பதிகத்தின் இறுதிப் பாடலில், தந்தது உந்தனை கொண்டது எந்தனை என்று மறுபடியும் வலியுறுத்துகின்றார்.

குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந் திருப்பெருந் துறையுறை சிவனே
இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய் இனியுன்னை என்னிரக்கேனே
சுந்தரரும் ஆவடுதுறைப் பதிகத்தின் ஒரு பாடலில் (7.70.6) குறைவிலா நிறைவு என்றும் குணக்குன்று என்றும் அழைக்கின்றார். தர்மமே வடிவாக விளங்குபவன் என்று சிவபெருமானை இங்கே சுந்தரர் குறிப்பிடுகின்றார். அறம் என்பதற்கு நீதி என்ற பொருளும் உண்டு. திருவள்ளுவர் அறவாழி அந்தணன் என்று குறிப்பிடுவதை நாம் இங்கே நினைவு கொள்ளலாம்.

குறைவிலா நிறைவே குணக் குன்றே கூத்தனே குழைக் காதுடையானே
உறவிலேன் உனையன்றி மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவுண்டே
சிறை வண்டார் பொழில் சூழ்த் திருவாரூர்ச் செம்பொனே திருவாவடுதுறையுள்
அறவனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமர்கள் ஏறே

நீதியே வடிவானவர் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். நீதியே உருவான பெருமான் நீதியை வழிநடத்துகின்றார் என்று செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பாடலிலும் (4.29.8) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

காருடைக் கொன்றை மாலை கதிர்மதி அரவினோடும்
நீருடைச் சடையுள் வைத்த நீதியார் நீதியுள்ளார்
பாரொடு விண்ணும் மண்ணும் பதினெட்டு கணங்கள் ஏத்தச்
சீரொடு பாடல் ஆனார் திருச்செம்பொன் பள்ளியாரே

பொழிப்புரை

நீதியே வடிவமாக உள்ளவனும், குறை ஏதும் இல்லாமல் நிறைவாக காணப்படுபவனும், நான்கு மறைகளையும் ஓதுபவனும், ஒருவரும் அறியமுடியாத சோதியாக விளங்குபவனும், செம்மையாக ஒளி வீசும் பொன்னம்பலத்து ஆதியாக உள்ளவனும் ஆகிய சிவபெருமானை மறந்தால் நான் வாழ்வில் உய்வினை அடையமாட்டேன். எனவே, எப்பொழுதும் அவரை நினைத்தவாறே இருப்பேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை! - நயினாா் நாகேந்திரன் பிரசாரம்
தினப்பலன்கள் - தனுசு
தினப்பலன்கள் - மிதுனம்
தினப்பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை