புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

26. அன்னம் பாலிக்கும் - பாடல் 11

சர்வ சங்கார காலத்தில் (முற்றூழிக் காலத்தில்) அழித்தல் தொழிலில் ஈடுபடும் சிவபிரானின் கோபம்,

Updated On :27 மே 2016, 12:24 pm

பாடல் 11

மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்
சதுரன் சிற்றம்பலவன் திருமலை
அதிர ஆர்த்தெடுத்தான் முடி பத்து இற
மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்மினே

விளக்கம்

மதுரம் = இனிமை. சதுரன் = சாமர்த்தியம் உடையவன். அதிர = நடுங்குமாறு. ஆர்த்து = ஆரவாரித்து. கொள் சேவடி = கொள்ளுதல் செய்த, கொண்ட திருவடி. அரக்கன் புகழ்ந்து பாடியதை ஏற்றுக்கொண்ட; கொள்ளுதல் என்பதற்கு அருளுதல் என்ற பொருள் உண்டு. சேவடி என்ற சொல்லினை, மிதி மற்றும் கொள் என்ற இரண்டு சொற்களுக்கும் பொதுவாக எடுத்துக் கொண்டு மிதி சேவடி மற்றும் கொள் சேவடி என்று பொருள் கொள்ள வேண்டும். அரக்கனது கர்வத்தினை அடக்குவதற்காக மிதித்த திருவடி, பின்னர் அவனது வழிபாட்டினை ஏற்றுக்கொண்டு அவனுக்கு அருள்கள் (சந்திரகாசம் என்ற வாள் மற்றும் மூன்று கோடி வாழ்நாள்) வழங்கிய சேவடியாக மாறிய நிலை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. திருமலை என்பது கயிலாய மலையினை குறிக்கும். கோயில் என்பது தில்லைச் சிதம்பரத்தை குறித்தலைப்போல, திருமலை என்ற சொல் கயிலாயத்தை குறிக்கும்.

சர்வ சங்கார காலத்தில் (முற்றூழிக் காலத்தில்) அழித்தல் தொழிலில் ஈடுபடும் சிவபிரானின் கோபம், முற்றிலும் தணிக்கப்படுவது, இறைவியின் இனிமையான மொழியால் தான். தனது. கோபம் தணிக்கப்பட்ட பின்னர், இறைவன் மீண்டும் படைத்தல் தொழிலில் ஈடுபடுகின்றான். இளைப்பு ஏதும் இன்றி, மூவகைத் தொழில்களிலும் ஈடுபடும் சிவபிரானை சதுரன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். உமை அம்மையின் மொழியினை, இனிமையான மொழி என்று குறிப்பிடும், அப்பர் பெருமானுக்கு, அந்த இனிய மொழியால் விளைந்த விளைவு நினைவுக்கு வந்தது போலும். தான் நினைத்த மாத்திரத்தில், உலகங்களையும், உலகத்தில் உள்ள பொருட்களையும் படைத்து, உயிர்களையும் பல உடல்களுடன் சேர்த்த, சாமர்த்தியமான செயல் சதுரன் என்ற சொல்லால் உணர்த்தப்படுகின்றது.

சதுரன் என்ற சொல்லினை, இராவணனது செருக்கினை அழித்த செய்கையுடன் இணைத்துச் சொல்வதும் உண்டு. தனது தோள் வலிமையால் அனைவரும் நடுங்குமாறு, உலகங்கள் எங்கும் திரிந்த அரக்கன் இராவணன், தனது வழியில் கயிலை மலை குறுக்கிட்டது என்று நினைத்து மிகுந்த கோபத்துடன் கயிலை மலையை அசைக்க முற்பட்ட போது, மலையின் அசைவினால் இறைவனின் அருகில் அமர்ந்திருந்த அன்னை பார்வதி தேவி நடுங்கிய சமயத்தில், பதட்டம் ஏதும் கொள்ளாமல், சிரித்தபடியே தனது கால் பெருவிரலை மெல்ல ஊன்றி, அரக்கனது இருபது தோள்களும் பத்து தலைகளும் வருந்துமாறு செய்த செய்கை, மிகவும் அரியது தானே. அதனால் தான் சதுரன் என்ற சொல்லைக் குறிப்பிடும் அப்பர் பிரான், இந்த நிகழ்ச்சியுடன் இணைத்துக் கூறுவதை நாம் கச்சி ஏகம்பப் பதிகம் ஒன்றில் (6.65.10) காணலாம். தன்னிசைய வைத்தல் = இறுக்கச் சுற்றுதல். எயிறு = பல்.

பொன்னிசையும் புரிசடை எம் புனிதன் தான் காண் பூத கணநாதன் காண் புலித்தோல் ஆடை
தன்னிசைய வாய்த்த எழில் அரவினான் காண் சங்க வெண்குழைக் காதில் சதுரன் காண்
மின்னிசையும் வெள் எயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்க அடி அடர்ப்ப மீண்டு அவன் தன் வாயில்
இன்னிசை கேட்டு இலங்கொளி வாள் ஈந்தோன் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

தில்லைச் சிற்றம்பலத்தில் நடமாடும் இறைவனது கோலத்தில், நம்மை மிகவும் அதிகமாக கவர்வது அவனது தூக்கிய திருவடி தான். இந்த திருவடியை, சிவபிரானின் அருட்செயலை குறிப்பதாக கூறுவார்கள். எனவே, இந்தத் திருப்பாதத்தை கை தொழுது வணங்கி உய்யவேண்டும் என்ற அறிவுரையுடன் பதிகத்தை அப்பர் பிரான் முடிக்கின்றார்.

பொழிப்புரை

இனிமையான மொழியினைப் பேசும் உமையம்மையை, தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டுள்ள சிற்றம்பலத்தான், சிறிதும் இளைப்பின்றி முத்தொழில்களையும் செய்யவல்ல ஆற்றல் உடையவன். சிவபெருமானின் ஆற்றலையும் கயிலை மலையின் புனிதத் தன்மையையும் கருத்தில் கொள்ளாது, பெருமான் உறையும் திருக்கயிலாய மலையினை, மிகுந்த செருக்கு கொண்டு, ஆரவாரத்துடன் மலை நடுங்குமாறு எடுக்கத் துணிந்த, அரக்கன் இராவணனது பத்துத் தலைகளும் வருந்துமாறு தனது திருவடியின் விரல் ஒன்றினை ஊன்றிய சிவபெருமான், பின்னர் அரக்கனது பாடலுக்கு இரங்கி வரங்கள் பல தந்து அருளினார். அவரது திருவடிகளைச் சார்ந்து, கை தொழுது வணங்கி, உய்வினை அடைவீர்களாக.

முடிவுரை

இந்த பதிகம் பதினோரு பாடல்கள் கொண்ட பதிகமாகத் திகழ்கின்றது பொதுவாக பத்து பாடல்களை வைத்து பதிகம் அருளும் அப்பர் பிரான், இறைவனின் திருப்பாதங்கள் தனது நெஞ்சினில் இருப்பதை பத்தாவது பாடல்) உணர்ந்த மகிழ்ச்சிப் பெருக்கில் ஒரு பாடல் அதிகமாக அளித்துள்ளார் போலும்.

இப்போதும் மகேச்வர வழிபாட்டில், இந்தப் பதிகத்தினைப் பாடுவது வழக்கமாக உள்ளது. அடியார்களுக்கு, இலையில் அன்னம் இட்ட பின்னர், அடியார்கள் இந்தப் பதிகத்தின் பாடலைப் பாடிய பின்னரே, உணவு உண்ணத் தொடங்கும் பழக்கம் உள்ளதை நாம் பல இடங்களில் காணலாம். இந்த பதிகத்தினை தொடர்ந்து பாடுவோருக்கு, அன்னம் தட்டுப்பாடு ஏதும் இல்லாமல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நாம் தினமும் பாராயணம் செய்ய வேண்டிய பதிகங்களில் ஒன்றாக பெரியோர்களால் கருதப்படும் பதிகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.