புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

27. நன்று நாள் தொறும் - பாடல் 4

தன்னைச் சரணடைந்த சந்திரன் நிறைந்து விளங்குமாறு, சந்திரனைத் தனது சடையில் சூடிய மணாளனும்,

Updated On :6 ஜூன் 2016, 9:38 am

பாடல் 4

அல்லல் இல்லை அருவினை தான் இல்லை
மல்கு வெண்பிறை சூடும் மணாளனார்
செல்வனார் திருவேட்களம் கை தொழ
வல்லர் ஆகில் வழியது காண்மினே

விளக்கம்

அல்லல் = பிறவியால் ஏற்படும் துன்பங்கள். அருவினை = நீக்குதற்கு அரிய வினைகள். மல்கு = நிறைந்து விளங்குதல். செல்வனார் = முக்திச் செல்வத்தை உடைய செல்வர்.

பொழிப்புரை

தன்னைச் சரணடைந்த சந்திரன் நிறைந்து விளங்குமாறு, சந்திரனைத் தனது சடையில் சூடிய மணாளனும், முக்தி எனப்படும் அழிவில்லாத செல்வத்தை உடைய செல்வரும் ஆகிய திருவேட்களத்து இறைவனைத் தங்களது கையால் தொழுது வணங்க வல்ல அடியார்களுக்கு, இந்த பிறவி எடுத்ததால் ஏற்படும் துன்பங்களும் இல்லை, அவர்களை, அந்நாள் வரை பிரிக்க முடியாதபடி பிணைத்திருந்த வினைகளும் அவர்களை விட்டு நீங்கிவிடும். எனவே வேட்களம் சென்று பெருமானை கைதொழுது உய்வதே சிறந்த வழி என்பதை உணர்ந்து செயல்படுவீராக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.