பாடல் 6
கட்டப்பட்டுக் கவலையில் வீழாதே
பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம் நீர்
சிட்டனார் திருவேட்களம் கை தொழ
பட்ட வல்வினை ஆயின பாறுமே

விளக்கம்

பொட்ட = விரைவாக. உடலினை விட்டு உயிர் பிரியும் தருணம் எது என்பதை நாம் எவரும் முன்னரே அறியமுடியாது. ஒரு சிலருக்கு தங்களது உயிர் பிரியும் தருணம் நெருங்கிவிட்டது என்ற உணர்வு தோன்றினாலும், அவர்கள் ஏதேனும் செயல்பட நினைக்கும் முன்னமே உயிர் பிரிந்துவிடும் என்பதை உணர்த்த, விரைவாக உயிர் பிரியும் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். பாறுதல் = அழிதல்.

பொழிப்புரை

உலக மாந்தர்களே, உலகப் பொருட்கள் மீது கொண்டுள்ள பாச பந்தங்களால், பலவிதமான செயல்களில் ஈடுபட்டு வேதனையில் ஆழ்கின்றீர்கள்; மேலும் உங்களது வினைகளையும் பெருக்கிக்கொள்கின்றீர்கள்; பல செயல்களையும் செய்யும் வல்லமை வாய்ந்த உயிர், தனது வினைகளைக் கழித்துக்கொள்ள ஏதேனும் செய்ய நினைக்கும் முன்னர், விரைவாக உயிர் உடலிலிருந்து பிரிந்துவிடும். எனவே நம்மால் அந்த தருணத்தில் நமது வினைகளைப் போக்கிக்கொள்ள ஏதும் செய்ய முடியாது. இந்த நிலையை நினைத்து நீங்கள் கவலையில் ஆழாமல், உங்களது உயிர் பிரியும் முன்னரே, இப்பொழுதே, உயர்ந்த இறைவனாகிய சிவபெருமான் வாழும் திருவேட்களம் சென்று, அவனை வணங்கித் தொழுவீர்களாக. இவ்வாறு செய்தால், உமது உயிருடன் பொருந்தியுள்ள வலிமை வாய்ந்த வினைகள் அனைத்தும் அழிந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

சனி பிரதோஷம் ஏன் சிறப்பு வாய்ந்தது? முக்கியத்துவம் என்ன?
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை