பாடல் 7
வட்ட மென்முலையாள் உமை பங்கனார்
எட்டும் ஒன்றும் இரண்டு மூன்றாயினார்
சிட்டர் சேர் திருவேட்களம் கை தொழுது
இட்டமாகி இரு மட நெஞ்சமே

விளக்கம்

எட்டும் = அட்ட மூர்த்தியாக இருக்கும் நிலை. ஒன்றும் = சித்தாந்த வழக்கில் இறைவனை பதி என்றும், உயிர்களை பசு என்றும் உலகப்பொருட்களை பாசம் என்றும் அழைப்பார்கள். அவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் ஒரே பதியாக சிவபெருமான் இருக்கும் தன்மை இங்கே ஒன்றும் என்ற சொல்லினால் குறிப்பிடப்படுகின்றது. இரண்டு = சிவமாகவும் சக்தியாகவும் இருக்கும் நிலை. மூன்றாயினார் = மூன்று தொழில்களையும், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று செயல்களையும் செய்பவராக இருக்கும் நிலை; தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போன்று, நமக்கு அறிவுரை கூறும் பாடல். அறியாமையில் ஆழ்ந்து கிடக்கும் மனம், என்பதை மட நெஞ்சமே என்ற தொடரினால் குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை

அழகாக வட்ட வடிவில் அமைந்துள்ளதும், மென்மையானதும் ஆகிய மார்பகங்களைக் கொண்டுள்ள உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்ற பெருமான், அட்ட மூர்த்தியாக, ஐந்து பூதங்களுடனும், சூரிய சந்திரர்களுடனும், அனைத்து உயிர்களுடனும் கலந்து உறைகின்றார். ஒப்பற்ற ஒருவனாக, அனைத்து உயிர்களுக்கும் பதியாக விளங்கும் அவர், சிவம் சக்தி ஆகிய இரண்டு வடிவங்களாக இருப்பதுடன், மும்மூர்த்திகளாகத் திகழ்ந்து காத்தல், படைத்தல் மற்றும் அழித்ததல் ஆகிய செயல்களை புரிகின்றார். ஒழுக்கத்தில் மேம்பட்ட அடியார்கள் பலரும் சென்று தொழும் திருவேட்களத்தில் உறையும் பெருமானை, அறியாமையில் மூழ்கி கிடக்கும் நெஞ்சமே, நீ தொழுது அவனது திருவடிகளைச் சென்று அடைய வேண்டும் என்ற உனது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

சனி பிரதோஷம் ஏன் சிறப்பு வாய்ந்தது? முக்கியத்துவம் என்ன?
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை