18. வண்ணங்கள் தாம் பாடி - பாடல் 6

ஆற்றல் உடைய எருதினை வாகனமாகக் கொண்டவராய், உடலில் நீறு பூசியவராய்,

Updated On :18 மார்ச் 2016, 9:10 am

பாடல் 6

வீறுடைய ஏறேறி நீறு பூசி வெண்தோடு பெய்து இடங்கை
வீணையேந்திக்
கூறுடைய மடவாள் ஓர் பாகம் கொண்டு குழையாடக்
கொடுகொட்டி கொட்டா வந்து
பாறுடைய படுதலை ஓர் கையில் ஏந்திப் பலி கொள்வார் அல்லர்
படிறே பேசி
ஆறுடைய சடைமுடி எம் அடிகள் போலும் அழகியரே ஆமாத்தூர்
ஐயனாரே

விளக்கம்

வீறு = ஆற்றல். படிறு = வஞ்சனையான பேச்சுக்கள். பாறு = பருந்து.

பொழிப்புரை

ஆற்றல் உடைய எருதினை வாகனமாகக் கொண்டவராய், உடலில் நீறு பூசியவராய், ஒரு காதினில் வெண்தோடு அணிந்தவராய், இடது கையில் வீணை வைத்திருப்பவராய், தனது உடலில் இடது பாகத்தில் உமையம்மையைக் கொண்டவராய் மற்றொரு காதில் அணிந்துள்ள குழை ஆடுமாறு, கொடுகொட்டிப் பறை முழங்க, கபாலத்திலிருந்து வீசும் புலால் நாற்றத்தினை உணர்ந்த பருந்துகள் அணுகும் தலையைக் கையில் ஏந்தியவராய், பிச்சை கேட்டு சிவபிரான் எனது இல்லம் வந்தார். ஆனால் பிச்சையினை ஏற்காமல், வஞ்சகமான பேச்சுக்களைப் பேசிய அவர், கங்கை நதியைத் தனது சடையில் சூடிக்கொண்ட அடிகள்தாம். அவர் மிகவும் அழகியரே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.