பாடல் 9
கல்லலகு தாம் கொண்டு காளத்தியார் கடிய விடையேறிக்
காணக் காண
இல்லமே தாம் புகுதா இடுமின் பிச்சை என்றாருக்கு எதிர் எழுந்தேன்
எங்கும் காணேன்
சொல்லாதே போகின்றீர் உம் ஊர் ஏது துருத்தி பழனமோ
நெய்த்தானமோ
அல்லலே செய்து அடிகள் போகின்றார் தாம் அழகியரே
ஆமாத்தூர் ஐயனாரே

விளக்கம்

கடிய = விரைந்து செல்லும். கல்லலகு = கற்கப்படும் மாத்திரை அளவு; இசைக் கலைஞர்கள், தாளத்தைக் கொண்டு பின்பற்றும் நேர அளவு; எனவே, தாளத்தைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். ஒரு வகை ஆயுதம் என்றும் கருதுகின்றனர்.

பொழிப்புரை

கல்லலகு எனப்படும் தாளத்தினைக் கையில் ஏந்திய, காளத்தியார், விரைந்து செல்லும் காளை வாகனத்தின் மீதேறி, எல்லோரும் காணும் வண்ணம் எனது இல்லத்தில் புகுந்து, பிச்சை இடுமாறு கோரினார். அவ்வாறு வந்தவருக்கு இடுவதற்காக பிச்சை கொண்டுவந்தபோது, அவரை வீட்டினுள் எங்கும் காணாமல், திகைத்த நான் அவரைத் தேடினேன். பின்னர் அவரைக் கண்டபோது, ஒன்றும் சொல்லாமல், பிச்சை ஏற்காமல் வீட்டை விட்டு செல்கின்றீரே, உமது ஊர் என்ன, பழனமா, அல்லது துருத்தியா அல்லது நெய்த்தானமா என்று வினவிய எனக்கு பதில் ஏதும் கூறாமல், என்னை வருத்தத்தில் ஆழ்த்திச் சென்ற, ஆமாத்தூர்த் தலைவர் மிகவும் அழகியரே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை