பாடல் 5
கானவன் காண் கானவனாய்ப் பொருதான் தான் காண் கனல்
ஆட வல்லான் காண் கையில் ஏந்தும்
மானவன் காண் மறை நான்கும் ஆயினான் காண் வல்லேறு ஒன்றது
ஏற வல்லான் தான் காண்
ஊனவன் காண் உலகத்துக்கு உயிர் ஆனான் காணஉரையவன்
காண் உணர்வவன் காண் உணர்ந்தார்க்கு என்றும்
தேனவன் காண் திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன் காண்
அவன் என் சிந்தையானே

விளக்கம்

கானவன் = காட்டில் வசிக்கும் வேடன். பொருதல் = போர் புரிதல். இந்தப் பாடலில் அப்பர் பிரான் இறைவனை, உயிர் என்றும், உடல் என்றும், உணர்வு என்றும் உணர்ச்சி என்றும், பல விதங்களிலும் உயிர்களுடன் இறைவன் இணைந்திருக்கும் தன்மையை உணர்த்துகின்றார். உணர்வு என்பதற்கு சொற்களால் உணர்த்தப்படும் பொருள் என்றும், உயிர்களின் உணரும் தன்மை என்றும் இரண்டு விதமாக பொருள் கூறுவார்கள். உரை என்ற சொல்லுக்கு அடுத்ததாக உணர்வு என்ற சொல் வருவதால், இரண்டையும் தொடர்பு படுத்தி சொல்லாகவும் சொற்கள் உணர்த்தும் பொருளாகவும் இறைவன் உள்ளான் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது.

பொழிப்புரை

காட்டில் உறையும் வேடுவனாக வேடம் தரித்தவனும், வேட்டுவக் கோலத்தில் அர்ஜுனனுடன் போர் புரிந்தவனும், ஊழித் தீயின் நடுவே நடமாட வல்லவனும், கையினில் மான் கன்றினை ஏந்தியவனும், நான்கு மறைகளாக இருப்பவனும், வல்லமை வாய்ந்த எருதினை வாகனமாகக் கொண்டவனும், பல வகையான உடல்களாக உள்ளவனும், பலவாறு வேறுபட்ட உடல்களின் உள்ளே உயிராகத் திகழ்பவனும், சொல்லாகவும் சொற்கள் உணர்த்தும் பொருளாகவும் இருப்பவனும், தன்னை உணர்ந்த அடியார்களுக்கு தேனாக இனிப்பவனும் ஆகிய பெருமான் முண்டீச்சரம் தலத்தில் சிவலோக நாதனாக காட்சி அளிக்கின்றான். அவன் எனது சிந்தையுடன் கலந்தவனாகவும் இருக்கின்றான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

உ.பி. படகு விபத்து: பலி 12ஆனது, தொடரும் தேடும் பணி!
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை